புதிய தொழிலை தொடங்கிய நேர்கொண்ட பார்வை நடிகை.. என்ன தொழில் தெரியுமா?
நடிகர் அஜித் நடிப்பில் வெளியான நேர் கொண்ட பார்வை படத்தின் மூலம், மூன்று கதாநாயகிகளுள் ஒருவராக நடித்திருப்பவர் தான் நடிகை ஸ்ரத்தா ஸ்ரீநாத். இவர் மாதவனுடன் ஏற்கனவே விக்ரம் வேதா படத்திலும் கதாநாயகியாக நடித்திருந்தார்.
மேலும் இவர் தமிழ் மொழி மட்டுமில்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி என அனைத்து மொழி திரையுலகிலும் நடித்துள்ளார்.
இந்நிலையில், தற்போது நடிகை என்பதை தாண்டி தொழிலதிபராகவும் புதிய அவதாரம் ஒன்றை எடுத்துள்ளார். அதாவது சென்னை வேளச்சேரியில் ‛பெர்சி’ என்ற பெயரில் கபே ஒன்றை திறந்து உள்ளதாக அவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதற்கு ரசிகர்கள் பலரும் பல வாழ்த்துக்களை கூறி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.