8ம் வகுப்பிலேயே படிப்பை நிறுத்திய நடிகை மீனா!

சினிமாவில் ஹீரோவாக இருக்கும் சிலர் நிஜ வாழ்க்கையில் ஹீரோவாக இருப்பதில்லை.

எனினும் ஒரு சிலர் தனது வாழ்க்கையில் போராடி நிஜ வாழ்விலும் ஹீரோவாக இருப்பார்கள். அந்த வகையில் நடிகை மீனாவும் ஒருவர்.

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக இருந்து கதாநாயகியானவர்களில் முக்கியமானவர் நடிகை மீனா.

வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து தமிழ் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார்.

சுமார் 15 ஆண்டுகளுக்கு மேலாக ரஜினி, கமல், அஜித் என பல முன்னணி நடிகர்களுடன் ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து மீனா, கடந்த 2009 ஆம் ஆண்டு வித்யாசாகர் என்பவரை திருமணம் செய்துகொண்டார். இந்த அளவு சாதித்திருக்கும் மீனா சிறுவயதில் இருந்தே வாழ்க்கையில் போராட கற்று கொண்டுள்ளார்.

நடிகை மீனா சிறு வயதிலேயே நடிக்க வந்ததால், 8ம் வகுப்பிலேயே நின்று விட்டார். அதன் பிறகு தனியாக கோச்சிங் சென்று போராடி 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றார்.

நடித்துக்கொண்டே திறந்தவெளி பல்கலைக்கழகம் மூலமாக வரலாற்றுப் பிரிவில் பட்டம் பெற்று சாதித்துள்ளார். இது ரசிகர்களுக்கு எடுத்து காட்டாகும்.

திருமணத்திற்கு பின்னரும் அவரின் சாதனை பயணத்தினை தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறார். மீண்டும் திரைப்படங்களில் முக்கிய வேடத்தில் நடித்து கொண்டிருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.