நடிகர் அஜித்தை கழுவி ஊற்றும் கஸ்தூரி.!

தினம்தோறும் சினிமா நடிகைகளால் சர்ச்சகைள் வெடித்து கொண்டு இருப்பது சாதாரணமாக நடைபெறும் ஒன்று தான். அந்த வகையில் பல சர்ச்சை கருத்துகளுக்கு சொந்தக்காரியாக இருப்பவர் நடிகை கஸ்தூரி. தற்போது இவர் செய்த காரியத்தை பற்றி தான் பார்க்கப்போகிறோம்.

கஸ்தூரி விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அதன் பின்னர் வனிதா போன்றவரால் கலாய்க்கப்பட்டு பின் வீட்டை விட்டு வெளியேறினார். அவரது ட்விட்டர் பக்கத்தில் லெஃப்ட் அன்ட் ரைட் கொடுக்கும் கஸ்தூரி பிக்பாஸ் வீட்டுக்குள் அடக்க ஒடுக்கமாகவே இருந்திருக்கிறார்.

அஜீத் ரசிகர்களுக்கும், நடிகை கஸ்தூரிக்கும் கடந்த சில மாதங்களாகவே டுவிட்டரில் மோதல் இருந்து வருகின்றது. இதுகுறித்து மிகவும் ஆபாசமான கருத்துக்களை அஜித் ரசிகர்கள் அவருடைய பதிவுகளில் தெரிவித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில், தற்போது நடிகை கஸ்தூரி, “நடிகர் அஜீத்குமார் மற்றும் அவருடைய மேனேஜர் சுரேஷ் சந்திரா உள்ளிட்டோர்களால் தான் அஜித் ரசிகர்கள் இவ்வளவு மோசமாக நடந்து கொள்கின்றனர்.” என்று கருத்து தெரிவித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கின்றது.