பல டிவிட்டர் அக்கௌன்ட்டுகளை ஒரே சாதனத்தில் இருந்து கையாள அதன் பயனாளர்களுக்கு போதிய வசதி வந்துவிட்டது. முன்பாக தங்களுடைய இரண்டாவது அக்கௌன்ட்டை TweetDeck மற்றும் Hootsuite போன்ற வெப் பிரவுசர்கள் மூலமாக பயன்படுத்தி வந்தனர். அல்லது எப்போதும் போல ஒரு அக்கௌன்ட்டில் இருந்து லாக் அவுட் செய்து விட்டு மறு அக்கௌன்ட்டை லாகின் செய்து வந்தனர்.
தற்போது இது இன்னும் சுலபமாக்கப்பட்டு உள்ளது. டிவிட்டரின் நேட்டிவ் ஆப்பை பயன்படுத்தி ஒரு அக்கௌன்ட்டில் இருந்து மற்றொரு அக்கௌன்ட்டிற்கு சுலபமாக மாறி கொள்ளலாம். இது போல ஐந்து அக்கௌன்ட் வரை வைத்துக் கொள்ளும் வசதி இதில் செய்யப்பட்டு உள்ளது. கீழே கொடுக்கப்பட்டுள்ள வழி முறைகளை பின்பற்றி எவ்வாறு ஒரு டிவிட்டர் அக்கௌன்ட்டில் இருந்து மற்றொரு அக்கௌன்டிற்கு மாறலாம் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
1. ஆன்டுராய்ட் போனிற்கான வழிமுறைகள்:
◆உங்கள் டிவிட்டர் செயலியை ஓபன் செய்து கொள்ளுங்கள்.
◆மேலே இடது புறம் உள்ள உங்கள் டிவிட்டர் அக்கௌன்ட் ஐகானை டச் செய்யுங்கள்.
◆ஒரு மெனு ஒன்று ஓபன் ஆகும். அதில் உங்கள் பெயருக்கு கீழே உள்ள அம்புகுறியை தொடுங்கள்.
◆ ‘Add an existing account’ ஐ கிளிக் செய்து கொள்ளுங்கள். இங்கிருந்தபடியே நீங்கள் வேறொரு அக்கௌன்ட்டை கூட ஓபன் செய்து கொள்ளலாம்.
◆நீங்கள் தேர்ந்தெடுக்கும் ஆப்ஷனை பொருத்து உங்கள் பெயர், இமெயில் ID மற்றும் மொபைல் எண்ணை பதிவு செய்யுங்கள்.
◆உங்களது இரண்டாவது அக்கௌன்ட்டை பயன்படுத்த சைடு மெனுவில் உங்கள் அக்கௌன்ட்டிற்கான ஐகானை கிளிக் செய்து பயன்படுத்தலாம்.
2.ஐபோனிற்கான வழிமுறைகள்:
◆உங்கள் டிவிட்டர் செயலியை ஓபன் செய்து கொள்ளுங்கள்.
◆மேலே இடது புறம் உள்ள உங்கள் டிவிட்டர் அக்கௌன்ட் ஐகானை டச் செய்யுங்கள்.
◆சைடு மெனு ஒன்று ஓபன் ஆகும். அதில் உங்கள் ஐகானிற்கு வலது புறத்தில் இருக்கும் மூன்று புள்ளிகளை டச் செய்யுங்கள்.
◆கீழே மெனு ஒன்று ஓபன் ஆகும். அதில் Add on existing account யை கிளிக் செய்யுங்கள்.
◆இதில் உங்கள் பெயர், மொபைல் எண், இமெயில் ID மற்றும் பாஸ்வேர்டை பதிவு செய்து லாகின் செய்யலாம்.
◆இரண்டாவது அக்கௌன்ட்டை ஓபன் செய்ய மேற்கூறிய வழி முறைகளை பின்பற்றி சைடு மெனுவை ஓபன் செய்து கொள்ளுங்கள்.
◆ஒன்றிற்கும் மேற்பட்ட அக்கௌன்ட் இருந்தால் கீழ் நோக்கி இருக்கும் அம்புகுறியின் மூலம் பயன்படுத்தி கொள்ளலாம்.
3. வெப்பில் பயன்படுத்த வழி முறைகள்:
◆உங்கள் டிவிட்டர் செயலியை ஓபன் செய்து கொள்ளுங்கள்.
◆இடது புறத்தில் இருக்கும் மூன்று புள்ளிகளை டச் செய்யுங்கள்.
◆இப்போது ‘+’ யை கிளிக் செய்து கொள்ளுங்கள்.
◆இதில் Add an existing account ஐ தேர்ந்தெடுங்கள்.
◆உங்களின் தகவல்கள் மற்றும் பாஸ்வெர்டை பதிவு செய்து அக்கௌன்ட்டை பயன்படுத்தலாம்.