இன்றைய நாளில் இந்த ராசிக்காரர்களுக்கு இவ்வளவு அதிர்ஷ்டமா ? ? இதோ இன்றைய ராசிபலன் (10.03.2020)

‘தினம் தினம் திருநாளே!’ தினப்பலன் மார்ச் 10-ம் தேதிக்கான மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான ராசிபலன் சிறப்புக் குறிப்புடன் கணித்துத் தந்திருக்கிறார் ‘ஜோதிடஶ்ரீ’ முருகப்ரியன்.

27 நட்சத்திரங்களுக்கும் அந்த நட்சத்திரம் இடம் பெற்றிருக்கும் ராசியின் அடிப்படையில் சிறப்புப் பலன் சொல்லப்பட்டிருக்கிறது.

மேஷம்
மேஷராசி அன்பர்களே!

மகிழ்ச்சி தரும் நாளாக இருக்கும். வாழ்க்கைத்துணையுடன் ஏற்பட்டிருந்த மனவருத்தம் நீங்கி அந்நியோன்யம் அதிகரிக்கும். வெளியூர்ப் பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. தந்தைவழியில் சில செலவுகள் ஏற்படக்கூடும். முக்கிய முடிவு ஒன்றை துணிச்சலுடன் எடுப்பீர்கள். அலுவலகத்தில் இதுவரை இருந்து வந்த பணிநெருக்கடி சற்று குறையும். அதிகாரிகளிடம் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் கூடுதலாக இருக்கும். காலையில் முருகப் பெருமானைத் துதித்து இந்த நாளைத் தொடங்குவது சிறப்பான பலன்களைக் கொண்டுவரும்.

அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் முக்கிய முடிவுகள் எடுப்பதைத் தவிர்க்கவும்

பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அரசாங்கக் காரியங்கள் அனுகூலமாக முடியும்.

கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிற்பகலுக்கு மேல் தந்தை வழியில் காரிய அனுகூலம் உண்டாகும்.

ரிஷபம்
ரிஷபராசி அன்பர்களே!

புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும். பணிகளில் கூடுதல் கவனம் தேவை. சகோதர வகையில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். சிலருக்கு வெளியூரில் இருக்கும் கோயில்களுக்குச் சென்று தரிசிக்கும் வாய்ப்பு ஏற்படக்கூடும். உறவினர்கள் வருகை மகிழ்ச்சி தரும். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். சக ஊழியர்கள் உதவியாக இருப்பார்கள். வியாபாரத்தில் பணியாளர்களால் சில பிரச்னைகள் ஏற்படக்கூடும். பிரச்னைகள் குறைய துர்கையை வழிபட்டு செயல்களைத் தொடங்குவது உத்தமம்.

கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதர வகையில் சில சங்கடங்கள் ஏற்பட்டு நீங்கும்.

ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றும் வாய்ப்பு ஏற்படக்கூடும்.

மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிற்பகலுக்கு மேல் உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி ஏற்படும்.

மிதுனம்
மிதுனராசி அன்பர்களே!

உற்சாகமான நாளாக இருக்கும். காரியங்களில் அனுகூலம் உண்டாகும். குடும்பத்தில் பெரியவர்களின் ஆலோசனை பயனுள்ளதாக இருக்கும். குடும்பத்துடன் குலதெய்வக் கோயிலுக்குச் செல்லும் வாய்ப்பு ஏற்படும். அலுவலகத்தில் வழக்கமான நிலையே காணப்படும். சக ஊழியர்களின் விஷயங்களில் தலையிடவேண்டாம். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். பணியாளர்களால் திடீர் செலவுகளும் ஏற்படும். மேலும் நல்ல பலன்களைப் பெற சூரிய பகவானை வழிபட்டு நாளைத் தொடங்குங்கள்.

மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிள்ளைகளால் செலவுகள் ஏற்படக்கூடும்.

திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வெளியூரில் இருக்கும் கோயில்களை தரிசிக்கும் வாய்ப்பு ஏற்படக்கூடும்.

புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு முக்கியப் பிரமுகர்களின் அறிமுகமும் அவர்களால் காரிய அனுகூலமும் உண்டாகும்.

கடகம்
கடகராசி அன்பர்களே!

மனதில் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். தாய்வழியில் சில பிரச்னைகள் ஏற்படக்கூடும். வாழ்க்கைத் துணையுடன் அனுசரித்துச் செல்லவும். உறவினர்கள் வருகையால் சில பிரச்னைகள் ஏற்பட்டாலும் பாதிப்பு இருக்காது. அலுவலகத்தில் சக ஊழியர்களால் சில பிரச்னைகள் ஏற்படக்கூடும். அதிகாரிகள் அனுசரணையாக நடந்துகொள்வார்கள். வியாபாரத்தில் திடீர் செலவுகளால் மனதில் சஞ்சலம் ஏற்படும். சிவபெருமானை வழிபடுவதன் மூலம் பிரச்னைகள் தீய பலன்கள் மறைந்து நல்ல பலன்கள் உண்டாகும்.

புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளில் ஈடுபடுவதை தவிர்க்கவும்.

பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்மாமன் வழியில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும்.

ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும்.

சிம்மம்
சிம்மராசி அன்பர்களே!

புதிய முயற்சி சாதகமாக முடியும். காரியங்களில் அனுகூலம் உண்டாகும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். வாழ்க்கைத் துணையின் ஆலோசனை பயனுள்ளதாக இருக்கும். வெளியூர்ப் பயணங்களைத் தவிர்க்கவும். அலுவலகத்தில் எதிர்பார்த்த சலுகை கிடைக்கும். அதிகாரிகளின் பாராட்டு கள் உற்சாகம் தரும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர்பார்த்ததைவிட கூடுதலாக இருக்கும். சங்கு சக்கரம் ஏந்திய பெருமாளை வழிபட்டு இந்த நாளைத் தொடங்குவது நன்மைகளை அதிகரிக்கும்.

மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிற்பகலுக்கு மேல் வாழ்க்கைத்துணைவழியில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும்.

பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளை காலையிலேயே தொடங்குவது நல்லது.

உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு உறவினர்கள் வருகையால் சில சங்கடங்கள் ஏற்படக்கூடும்.

கன்னி
கன்னிராசி அன்பர்களே!

அதிர்ஷ்டம் தரும் நாளாக இருக்கும். சிலருக்கு கோயில்களுக்குச் சென்று வழிபாடுகளில் கலந்துகொள்ளும் வாய்ப்பு ஏற்படக்கூடும். எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு. தந்தையின் விருப்பத்தைப் பூர்த்தி செய்து மகிழ்ச்சியடைவீர்கள். அலுவலகத்தில் எதிர்பாராத சலுகைகள் கிடைப்பது உற்சாகமும் மகிழ்ச்சியும் தரும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். மேலும் நற்பலன்கள் அதிகரிக்க மகாலட்சுமியை வழிபட்டு நாளைத் தொடங்குவது சிறப்பு.

உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பிற்பகலுக்கு மேல் தொடங்கும் முயற்சி சாதகமாக முடியும்.

அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.

சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மாலையில் உறவினர்களால் எதிர்பாராத செலவுகள் ஏற்படக்கூடும்.

துலாம்
துலாராசி அன்பர்களே!

எதிலும் பொறுமையைக் கடைப்பிடிக்கவேண்டிய நாள். புதிய முயற்சிகளைத் தவிர்ப்பது நல்லது. பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும். சிலருக்கு நவீன டிசைனில் ஆடைகள் வாங்கும் வாய்ப்பு ஏற்படும். மகான்களை தரிசிக்கவும் அவர்களின் ஆசிகளைப் பெறவும் வாய்ப்பு ஏற்படக்கூடும். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரித்தாலும் அலட்டிக்கொள்ளாமல் செய்து பாராட்டு பெறுவீர்கள். வியாபாரம் சுமாராகத்தான் இருக்கும். ஶ்ரீ ஷீர்டி சாயிபாபாவை வணங்கித் தொடங்க இந்த நாள் இனிய நாளாகும்.

சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வாழ்க்கைத்துணையின் விருப்பத்தை நிறைவேற்றி மகிழ்வீர்கள்.

சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தெய்வப் பணிகளில் ஈடுபடும் வாய்ப்பு ஏற்படும்.

விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அதிகாரிகளால் காரிய அனுகூலம் உண்டாகும்.

விருச்சிகம்
விருச்சிகராசி அன்பர்களே!

இன்று புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம். குடும்பப் பொறுப்புகளின் காரணமாக அலைச்சல் ஏற்படக் கூடும். உறவினர்கள் வருகை சில சங்கடங்களைத் தரும். பொறுமையைக் கடைப்பிடிப்பது நல்லது. தாயின் அன்பும் ஆதரவும் மகிழ்ச்சி தரும். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். சக ஊழியர்களுடன் பேசுவதில் கவனமாக இருக்கவும். வியாபாரத்தில் ஏற்படும் சில பிரச்னைகளால் மனதில் சஞ்சலம் உண்டாகும். ஆஞ்சநேயரை மனதில் நினைத்துக்கொள்வது பணிகளை விரைந்து முடிக்கும் பலம் தரும்.

விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாயின் விருப்பத்தை நிறைவேற்றி மகிழும் வாய்ப்பு ஏற்படும்.

அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வெளியூரிலிருந்து எதிர்பார்த்த சுபச் செய்தி கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு.

கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணைவழியில் செலவுகள் ஏற்படக்கூடும்.

தனுசு
தனுசுராசி அன்பர்களே!

மனதில் உற்சாகம் பெருக்கெடுக்கும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். முக்கிய பிரமுகர்களின் அறிமுகமும் அவர்களால் ஆதாயமும் கிடைக்கக்கூடும். வாழ்க்கைத்துணைவழியில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். அலுவலகத்தில் உற்சாகமான சூழ்நிலையே காணப்படும். எதிர்பார்த்த சலுகை கிடைக்கும். வியாபாரத்தில் விற்பனை விறுவிறுப்பாக நடக்கும். திருப்பதி வேங்கடாசலபதியை வணங்க பணவரவில் இருந்த மந்த நிலை விலகும்.

மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மாலையில் உறவினர்கள் வருகை மகிழ்ச்சி தருவதாக இருக்கும்.

பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அதிகாரிகளை அணுகும்போது பொறுமையைக் கடைப்பிடிப்பது நல்லது.

உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பயணத்தால் ஆதாயம் உண்டாகும்.

மகரம்
மகரராசி அன்பர்களே!

அதிர்ஷ்டமும் நல்ல வாய்ப்புகளும் ஏற்படும் நாளாக இருக்கும். சகோதர வகையில் ஆதாயம் ஏற்படக்கூடும். உறவினர்கள் வருகையால் வீட்டில் சிறுசிறு சலசலப்புகள் ஏற்படக்கூடும். சிலருக்கு புதிய ஆடை, ஆபரணங்களின் சேர்க்கைக்கும், எதிர்பாராத பண வரவுக்கும் வாய்ப்பு உண்டு. அலுவலகத்தில் இதுவரை எதிர்பார்த்த சலுகை இன்று கிடைப்பதற்கு வாய்ப்பு உள்ளது. வியாபாரத்தில் சக வியாபாரிகளின் ஆதரவு மகிழ்ச்சி தருவதாக இருக்கும். லாபமும் அதிகரிக்கும்.

உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மற்றவர்களுடன் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும்.

திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத செலவுகள் ஏற்படக்கூடும்.

அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மாலையில் உறவினர்களின் சந்திப்பு ஆதாயம் தருவதாக இருக்கும்.

கும்பம்
கும்பராசி அன்பர்களே!

முற்பகல் சாதகமாக இருக்கும். பிற்பகலில் எச்சரிக்கை தேவை. நீண்டநாள்களாக எதிர்பார்த்து ஏமாந்த பணம் இன்று கைக்கு வந்து மகிழ்ச்சி தரும். சிலருக்கு குலதெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றும் வாய்ப்பு ஏற்படும். குடும்பப் பொறுப்புகளை மகிழ்ச்சியுடன் நிறைவேற்றுவீர்கள். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். எதிர்காலம் குறித்த கவலைகள் விலக ஶ்ரீதட்சிணாமூர்த்தியை வணங்கி பணிகளைத் தொடங்குவது உத்தமம்

அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டாகும்.

சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிள்ளைகள் வழியில் மகிழ்ச்சி தரும் செய்தி கிடைக்கும்.

பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பணம் கொடுக்கல் வாங்கலில் கவனமாக இருக்கவும்.

மீனம்
மீனராசி அன்பர்களே!

செலவுகள் அதிகரிக்கும். தாயின் தேவையை நிறைவேற்ற சிறிது அலையவேண்டியிருக்கும். சிலருக்கு பயணங்களால் அனுகூலம் உண்டாகும். உடல் நலனில் கவனம் தேவை. தெய்வப் பிரார்த்தனைகளை இன்று நிறைவேற்றும் வாய்ப்பு ஏற்படும். அலுவலகத்தில் பணிகளில் கூடுதல் கவனம் தேவை. அதிகாரிகளின் பாராட்டுகள் மனதுக்கு உற்சாகம் தரும். வியாபாரம் வழக்கம்போலவே இருக்கும். சக வியாபாரிகளிடம் இணக்கமாக நடந்துகொள்ளவும். ஆரோக்கியம் அதிகரிக்க தன்வந்திரி பகவானை மனதில் நினைத்து வழிபட்டு வேலையைத் தொடங்குவது நல்லது.

பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு திடீர் பயணத்தால் உடல் அசதி ஏற்படக்கூடும்.

உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் முக்கிய முடிவுகளை எடுப்பதைத் தவிர்ப்பது நல்லது.

ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நண்பர்கள் வழியில் காரிய அனுகூலம் உண்டாகும்.