சமூக வலைத்தளங்களில் அனைவராலும் கவரப்படும் இரட்டை ரோஜா சீரியல் நாயகி ஷிவானி !!!

தற்போது 20 வயதை எட்டியுள்ள ஷிவானி நடராஜன், சாத்துர் எனும் ஊரில் பிறந்தவர். தற்போது சென்னையில் வசித்து வரும் இவருக்கு சிறு வயது முதலே சினிமா துறையில் ஆர்வம் இருந்து வந்துள்ளது. இவர் பங்கேற்ற சிலர் பேஷன் ஷோக்களில் இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்ததால் மாடலிங் செய்வது என முதலில் முடிவெடுத்தார்.

பின்னர் சரவணன் மீனாட்சி எனும் தொடரில் சின்ன கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அந்த கதாபாத்திரத்திலும் கூட இவர் அதிகம் கவரப்பட்ட ஒரு நபராக இருந்தார்.

பகல் நிலவு சீரியலில் இரண்டாவது ஹீரோயினாக அறிமுகமான இவர், நாளடைவில் இவர் மற்றும் இவரது ஜோடி அர்ஜுன் ஆகியோரின் காட்சி அமைப்புகள் ரசிகர்கள் இடத்தில் நல்ல வரவேற்பு பெறவே லீட் ரோலுக்கு மாற்றபட்டார்.

பின்னர் கடை குட்டி சிங்கம் எனும் தொடரில் நடித்து வந்த இவர் அந்த திரைக்கதையில் இவருக்கு அவ்வளவாக வாய்ப்பு வழங்கப்படாத நிலையில் அதிலிருந்து வெளியேறினார். இவரது திறமையை நிரூபிக்கும் வகையில் இவருக்கு ஜீ தமிழில் இரட்டை ரோஜா என்ற சீரியல் கிடைத்தது. தற்போது இதில் இரட்டை வேடத்தில் நடித்து வருகிறார். இவருக்கு டான்சிங் போட்டோகிராபி மற்றும் டிராவலிங் போன்றவை மிகவும் பிடித்த விஷயங்கள் ஆகும்.

பிராமின் சமூகத்தை சேர்ந்த இவர் தற்போது தனது சீரியல் போன்ற விஷயங்களுக்காக சென்னையில் வசித்து வருகிறார். இவரது தந்தை தொழிலதிபர் ஆவார். இவர் மாடலிங் துறையில் ஈடுபட்ட காரணத்தினால் இவரால் பன்னிரண்டாம் வகுப்புக்கு மேல் மேற்படிப்பை தொடர முடியவில்லை.

இவரது பேவரிட் நடிகர் நாகார்ஜுனா ஆவார். மற்றும் பேவரிட் நடிகை அனுஷ்கா செட்டி ஆவார். இவருக்கு மிகவும் பிடித்த உடை தமிழ்நாட்டு கலாச்சார உடையான புடவை. மிகவும் பிடித்த உணவு கான்டினென்டல், ஃபாஸ்ட் ஃபுட் ஆகும். இவருக்கு மிகவும் பிடித்த இசை கர்நாடக இசை மற்றும் ராப் பாடல்கள் ஆகும்.
தற்போது வெள்ளித்திரையிலும் ஆர்வமுள்ள சிவானி அவர்கள் அதற்கான வாய்ப்புகளை தேடி வருகிறார். சமூக வலைத்தளங்களில் இவர் போடும் போஸ்ட்களுக்கு எண்ணற்ற ரசிகர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.