திருப்பூரில் மகளிர் தினத்தை முன்னிட்டு திருப்பூரில் இருவேறு இடங்களில் நடைபெற்ற மாரத்தான் போட்டி..!

மகளிர் தினத்தை முன்னிட்டு திருப்பூரில் இருவேறு இடங்களில் நடைபெற்ற மாரத்தான் போட்டிகளில் பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பெண்கள் முடிகளை தானமாக வழங்கினர்.

மகளிர் தினத்தை முன்னிட்டு இன்று திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரியில் இருந்து வஞ்சிபாளையம் வரை மகளிர் பாதுகாப்பை வலியுறுத்தியும் , அதேபோல் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து வீரபாண்டி வரையில் புற்றுநோய் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் மாரத்தான் போட்டிகள் நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியர் விஜய கார்த்திகேயன் துவக்கி வைத்த இந்த போட்டிகளில் சிறுவர்கள் குழந்தைகள் பெண்கள் உட்பட ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.இந்த மாரத்தான் போட்டிகளில் முதல் மூன்று இடம் பிடித்தவர்களுக்கு பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

மாரத்தான் போட்டிகளின் முடிவில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்காக பெண்கள் ஏராளமானோர் தங்கள் முடிகளை தானமாக கொடுத்தனர் .அவர்களுக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது .