இஸ்ரோவின் இளம் விஞ்ஞானிக்கான விண்ணப்ப இறுதித் திகதி இன்றுடன் முடிவு

இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ இளம் விஞ்ஞானிகளை கண்டறியும் முயற்சியில் இறங்கியுள்ளது.

இதற்காக Yuva Vigyani Karyakram (Yuvika) எனும் திட்டத்தினை அறிமுகம் செய்துள்ளது.

இதன் மூலம் இந்தியாவில் வசிக்கும் இளம் விஞ்ஞானிகள் தமது விண்ணப்பங்களை அனுப்பி வைக்க முடியும்.

தற்போதுவரை சுமார் 1,53,000 விண்ணப்பங்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.

எனினும் இன்றைய தினம் மாலை 6 மணி வரை ஒன்லைனில் விண்ணப்பிக்க முடியும் எனவும் தெரவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை கடந்த பெப்ரவரி மாதம் 23 ஆம் திகதி முதல் விண்ணப்பங்களை இஸ்ரோ ஏற்று வந்தமை குறிப்பிடத்தக்கது.