கொரோனா வைரஸ் தொடர்பான பதிவுகளை இந்த அப்பிளிக்கேஷனில் பகிருவதற்கு தடை..!!

கொரோனா வைரஸ் தொடர்பான அச்சம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கின்றது.

இந்நிலையில் இவ் வைரஸினை பயன்படுத்தி மக்களை அச்சுறுத்தும் போலியான தகவல்களும் பகிரப்பட்டு வருகின்றன.

இதன் காரணமாக சீனாவின் பிரபல குறுஞ்செய்தி செயலியான WeChat இல் வைரஸ் தொடர்பான பதிவுகளை பகிருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த தடையானது கடந்த ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் அமுலுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

இதனை டொரன்டோவில் உள்ள Citizen Lab இன் ஆராய்ச்சியாளர்கள் குழு கண்டறிந்துள்ளது.

இந்த தடையானது அடுத்த ஒரு வருட காலத்திற்கு தொடரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.