விளம்பரங்களை வழங்கும் பேஸ்புக்…!!

பேஸ்புக் நிறுவனமானது உலக சுகாதார நிறுவனத்திற்கு இலவசமாக விளம்பரம் செய்யக்கூடிய வாய்ப்பினை வழங்கவுள்ளது.

இந்த தகவலை பேஸ்புக் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியான மார்க் ஷுக்கர் பேர்க் தெரிவித்துள்ளார்.

தற்போது வேகமாக பரவி வரும் கொரோனா அல்லது COVID – 19 தொடர்பில் தவறான தகவல்கள் மற்றும் விளம்பரங்கள் பரப்பப்பட்டு வருகின்றன.

இது உலக சுகாதார நிறுவனத்திற்கு ஓர் சவாலாக மாறியுள்ளது.

எனவே மக்களை தெளிவு படுத்துவதற்காக இந்த வாய்ப்பினை பேஸ்புக் நிறுவனமானது உலக சுகாதார நிறுவனத்திற்கு வழங்க முன்வந்துள்ளது.

எனவே வரையறை அற்ற முறையில் தேவையான அளவு விளம்பரங்களை இலவசமான முறையில் உலக சுகாதார நிறுவனம் பேஸ்புக் வலைத்தளத்தில் மேற்கொள்ள முடியும்.