நடிகை அமலா பாலின் நெருங்கிய தோழிக்கு அடித்தது ஜாக்பாட்.!

சினிமா நிகழ்ச்சிகள் மற்றும் விழாக்களை தொகுத்து வழங்குவதில் புகழ்பெற்ற தொகுப்பாளினியான ரம்யாவிற்கு ரசிகர்கள் மத்தியில் ஒரு நல்ல இடம் இருக்கின்றது.

ஜோடி நம்பர் ஒன், உங்களில் யார் அடுத்த பிரபுதேவா என பல பிரபல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவது மட்டும் அல்லாமல் ஓகே கண்மணி, மாசு என்கிற மாசிலாமணி, வனமகன், ஆடை உள்ளிட்ட படங்களில் சிறிய கதாபாத்திரத்தில் அவர் நடித்து இருந்தார்.

தற்போது வெளியான ஆடை படத்தில் அமலாபால்க்கு நெருங்கிய தோழியாக அவர் நடித்திருந்தார். அந்த படத்தில் அமலா பாலுடன் லிப் டு லிப் முத்தக் காட்சி ஒன்றையும் நடித்து சர்ச்சைக்கு ஆளானார். இந்த படம் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது.

தொடர்ந்து டிவி நிகழ்ச்சிகள், சினிமா என்று பிஸியாக இருக்கும் ரம்யாவிற்கு தற்போது ஒரு ஜாக்பாட் அடித்திருக்கிறது. வெற்றிமாறன் இயக்கத்தில் முதன்முறையாக ரம்யா ஹீரோயினாக களமிறங்குகிறார். இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.