பேஸ்புக் நிறுவனத்திற்கு காத்திருந்த அதிர்ச்சி..!!

பேஸ்புக் நிறுவனத்திற்கு சொந்தமான அதன் டுவிட்டர் பக்கம் மற்றும் பேஸ்புக் மெசஞ்சரிக்கு சொந்தமான டுவிட்டர் பக்கம் என்பவற்றின் கணக்குகள் ஹேக் செய்யப்பட்டுள்ளன.

இந்த தகவலை தற்போது டுவிட்டர் நிறுவனமும் உறுதி செய்துள்ளது.

மூன்றாம் நபர் பிளாட்போர்மினை பயன்படுத்தி இந்த ஹேக்கிங் இடம்பெற்றுள்ளதாக டுவிட்டர் நிறுவனத்தின் பேச்சாளர் அனுப்பிய மின்னஞ்சலில் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் இவற்றினை மீட்கும் நவடிக்கையில் தாம் மும்முரமாக ஈடுபட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை கடந்த வெள்ளிக்கிழமை தனது சமூகவலைத்தளத்திற்கு சொந்தமான டுவிட்டர் பக்கங்கள் ஹேக் செய்யப்பட்டுள்ளதாக பேஸ்புக் நிறுவனமும் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை கடந்த ஆகஸ்ட் மாதம் டுவிட்டர் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியான Jack Dorsey என்பவரின் டுவிட்டர் கணக்கும் ஹேக் செய்யப்பட்டிருந்தமை தெரிந்ததே.