தாலிகட்டும் நேரத்தில் ஓட்டம்பிடித்த மணப்பெண்!

கேரளாவில் திருமண முகூர்த்த நேரத்தில் மணப்பெண் ஓட்டம் பிடித்த நிலையில் இன்னொரு பெண் திடீரென மணமகள் ஆகி திருமணம் இனிதே நடைபெற்றுள்ளது.

கேரளாவின் Tirurangadi-ஐ சேர்ந்த இளைஞருக்கும், இளம்பெண்ணுக்கும் சில தினங்களுக்கு முன்னர் திருமணம் நடக்கவிருந்தது.

முகூர்த்த நேரம் நெருங்கிய நிலையில் மணப்பெண் திடீரென மண்டபத்தில் இருந்து மாயமானார்.

விசாரணையில் காதலருடன் அவர் ஓடி போனது தெரியவந்தது.

இதனால் மணமகன் மற்றும் அவர் குடும்பத்தார் அதிர்ச்சியடைந்ததோடு தங்கள் குடும்பத்தின் கெளரவம் போய்விடுமோ என கவலையடைந்தனர்.

இதை தடுக்க உடனடியாக வேறு மணப்பெண்ணை தேடினார்கள்.

அதன்படி Cheruppara-ஐ சேர்ந்த இளம்பெண் இந்த திருமணத்துக்கு ஒத்து கொண்ட நிலையில் அதே முகூர்த்த நேரத்தில் இருவருக்கும் திருமணம் நடைபெற்றது.

இதையடுத்து மணமகன் குடும்பத்தார் மற்றும் அவர் உறவினர்கள் நிம்மதியடைந்தனர்.

பின்னர் ஓடிபோன மணப்பெண் அடுத்த நாள் தனது காதலனுடன் காவல் நிலையத்தில் தஞ்சமடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.