யாழ் பல்கலைகழக மாணவிகள்மீது பகிடிவதை மேற்கொண்டவர்கள் யார் புத்திரர்கள் தெரியுமா?

கடந்த ஆறு மாதங்களுக்கு முன் யாழ் பல்கலைகழகம் கிளிநொச்சி வளாகத்தின் பெண்கள் விடுதியில் மோசமாக பகிவதை ஒன்று நடந்த போது அதனை விடுதி பெண் காப்பாளர் தனது தொலைபேசியில் காணொளி எடுத்துள்ளார்.

இதனை அவதானித்த மாணவர்கள் அவரை பெண் என்றும் பாராது காப்பளரை கீழே வீழ்த்தி அவரது தொலைபேசியை பறித்து உடைத்துள்ளனர்.

இது தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடும் செய்யப்பட்டது. இருந்தும் எவ்வித நடவடிக்கைகளும் இன்றி குறித்த விடயம் மூடி மறைக்கப்பட்டது.

அத்துடன் பல்கலைகழக நிர்வாகமும் இது தொடர்பில் எவ்வித நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை.

அவர்கள் பல்கலைகழக பெயர் கெட்டுவிடும் என்பதால் அந்த விடயத்தினை மூடி மூடி மறைத்தபோதும் தற்பொழுது அது விஸ்வரூபம் எடுத்துள்ளது.

இந்நிலையில் கிளிநொச்சி வளகத்தின் தொழிநுட்ப பீடத்தின் 2017 பிரிவு மாணவர்களே இவ்வாறு மிக மோசமான பகிடிவதைகளை மேற்கொள்வதாகவும் தெரியவருகின்றது .

இதேவேளை குறித்த பிரிவில் உள்ள மாணவர்களில் இருவர் கடந்த ஆட்சியின் இரண்டு பிரதி அமைச்சர்களின் மகன்கள் என தகவல்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.