உலகளவில் பிரபலமான இலங்கை பெண்ணிற்கு ரசிகர்கள் கொடுத்த பரிசு..

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் உலகபுகழ் அடைந்த இலங்கையைச் சேர்ந்த லொஸ்லியா தற்போது நடிப்பில் களமிறங்கி ரசிகர்களை உச்சக்கட்ட கொண்டாட்டத்தில் ஆழ்த்தியுள்ளார்.

இந்நிலையில் நடிகர் ஆரியுடன் புகைப்படம் ஒன்றினை வெளியிட்டு திரைப்படத்தில் நடிக்கவிருப்பதை உறுதி செய்தார். இவர் நடிக்கவிருக்கும் முதல் படத்தின் பூஜை கூட முடிந்துவிட்டது என்றே கூறப்படுகின்றது.

இதனால் இந்தியா மற்றும் இலங்கை ரசிகர்கள் உச்சக்கட்ட மகிழ்ச்சியடைந்ததுடன், தங்களது வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.

தற்போது லொஸ்லியாவின் ரசிகர்கள் அவருக்கு பரிசு ஒன்றினை அளித்துள்ளனர். இதனை லொஸ்லியா திறந்து பார்த்ததும் மிகவும் மகிழ்ச்சியடைந்து நன்றி கூறிய காட்சி சமூகவலைத்தளங்களில் தீயாய் பரவி வருகின்றது.