25 வயதேயான ஜோனாதன் பமோயி என்பவர், மணிப்பூரில் இருந்து சென்னை அண்ணாநகரில் தங்கி கடந்த ஆறு மாதங்களாக சென்னையில் ஓட்டல் ஒன்றில் வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று மாலை அவர் பணிபுரிந்த ஹோட்டல் மேலதிகாரியிடம் வீட்டுக்கு செல்வதாக கூறிவிட்டு ஹோட்டலிலிருந்து கிளம்பியுள்ளார்.
ஆனால் அவர் ஹோட்டலுக்கு திரும்பி வரவில்லை. அடுத்த நாளும் அவர் வேலைக்கு வரவில்லை எனவே சந்தேகமடைந்த மேலாளர் அவன் தங்கி இருக்கும் அறைக்கு சென்று அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அவனது அறையை சோதனை செய்துள்ளார்.
அப்போது, ஜோனாதன் அவர் பெட் ரூமில் இருக்கும் பேனில் தூக்கிட்டு தற்கொலை கொலை தற்கொலை செய்துகொண்டு சடலமாக தொங்கி கொண்டிருந்தார். இதுகுறித்து மேலாளர் பொலிசாருக்கு தகவல் அளித்துள்ளார். தகவலறிந்து வந்த போலீசார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
அதன் பின்னர், அவரது அறையில் இருந்த போனை சோதித்து பார்த்ததில் அவர் தற்கொலை செய்வதற்கு முன்னதாக ஒரு பெண்ணிடம் வீடியோ காலில் பேசி இருப்பது தெரியவந்துள்ளது. இதைத்தொடர்ந்து அந்த பெண்ணை தொடர்பு கொண்டு போலீசார் விசாரித்துள்ளனர்.
அப்போது அந்தப் பெண் தெரிவித்திருப்பதாவது, ஜோனாதன் அந்த பெண்ணை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். இந்த சம்பவம் நடந்த அன்று இவருக்கு வீடியோ காலில் போன் செய்து தன்னை காதலிக்க விட்டால் தற்கொலை செய்து கொள்வேன் என்று கூறி கொண்டே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார் என்று அந்த பெண் தெரிவித்துள்ளார். மேலும் இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.