பாலியல் பலாத்கார புகாரை வாபஸ் பெற மறுத்த பெண்மணி..!! நடந்த கொடூரம்..!!

இந்தியா முழுவதும் பெண்களுக்கு எதிரான அநீதிகள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பெண்களுக்கு எதிரான அநீதிகளை பொருத்தவரை அது இந்தியா மட்டுமல்லாது உலக நாடுகளையும் பெரும் அச்சுறுத்தலுக்கு ஆழ்த்தியுள்ளது. மேலும், இந்தியாவில் எடுக்கப்பட்ட குற்றப் பத்திரிக்கைகளின் முடிவின்படி, ஒரு நாள் ஒன்றுக்கு 94 பாலியல் பலாத்காரம் தொடர்பான குற்றங்கள் காவல் நிலையத்தில் புகாரளிக்க படுவதாகவும் தெரியவந்துள்ளது.

இதனைப்போன்று பெண்களுக்கு எதிரான வரதட்சணை கொடுமை, கொலை போன்ற சம்பவங்களும் நாள் ஒன்றுக்கு 80 க்கும் அதிகமாக நடைபெறுகிறது. இந்த நிலையில், பெண்களை ஒருதலைபட்சமாக காதலிப்பது, நாடகக்காதல் செய்வது போன்ற பிரச்சனையால் பல பெண்களின் வாழ்க்கையும் பெரும் கேள்விக்குறிக்கு உள்ளாகும் சோகமும் அரங்கேறி வருகிறது.

மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள தானே மாவட்டத்தில் இருக்கும் பெண் ஒருவர் பாலியல் பலாத்கார பிரச்சனையால் பாதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து அங்குள்ள காவல் நிலையத்தில் பெண் புகார் அளித்த நிலையில், புகாரை வாபஸ் பெறக்கோரி பெண்ணின் மீது ஆசிட் வீசிய சம்பவம் நடந்துள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இது குறித்த விசாரணையில், தானே மாவட்டத்தில் உள்ள மிராரோடு பகுதியில் 20 வயதுடைய திருமணம் முடித்த பெண்ணை வாலிபர் மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்த நிலையில், இது தொடர்பாக அங்குள்ள காவல் நிலையத்தில் பெண் புகார் அளித்துள்ளார். இது குறித்த புகாரின் பேரில் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

புகாரை வாபஸ் பெற குற்றவாளி தரப்பில் மிரட்டல் விடுக்கப்பட்டு இருந்துள்ளது. இதனை பெண் ஏற்க மறுப்பு தெரிவித்த நிலையில், வாலிபர் நேற்று புகாரை வாபஸ் பெற கூறி மீண்டும் மிரட்டல் விடுத்துள்ளார். இதற்கு பெண் எதிர்ப்பு தெரிவித்ததால், அவரது முகத்தில் பெட்ரோலை வீசிவிட்டு தப்பி சென்றுள்ளான். இதனால் பெண்ணின் கண்கள் பாதிக்கப்பட்டு வலியால் அலறித்துடித்துள்ளார். இதனை கண்டு பெரும் அதிர்ச்சிக்கு உள்ளான அக்கம் பக்கத்தினர் பெண்ணை மீட்டு மருத்துவமனையில் அனுமதி செய்யவே, இது தொடர்பாக தகவல் அறிந்த காவல் துறையினர் அகமதாபாத்தில் தலைமறைவாக பதுங்கியிருந்த கொடூரனை கைது செய்தனர்.