ஆல்பம் பாடல்கள் மட்டுமே வெளியிட்டு வந்த ஹிப் ஹாப் ஆதிக்கு இசையமைப்பாளர் வாய்ப்பு கொடுத்தவர் சுந்தர் சி. அதன்பிறகு அவரது பல படங்களுக்கும் ஆதி தான் இசையமைப்பாளர்.
அதன் பின் ஆதியை ஹீரோவாக போட்டு படம் தயாரிக்கவும் செய்தார் சுந்தர்.சி. இப்படி பல வகையில் ஆதியின் வளர்ச்சிக்கு சுந்தர்.சி கொடுத்த ஆதரவு தான் காரணம்.
இந்நிலையில் தற்போது அவர்கள் இருவருக்குமிடையே விரிசல் என தகவல் பரவி வருகிறது. அவரது அடுத்த படமான அரண்மனை 3ல் வேறு ஒரு இசையமைப்பாளரை போட்டுள்ளார் சுந்தர் சி.
சுந்தர் சி தயாரித்துள்ள நான் சிரித்தால் படத்தின் ஷூட்டிங்கில் ஆதி சரியாக ஒத்துழைப்பு கொடுக்கவில்லையாம். அதனால் தான் தற்போது அவர்களுக்கு இடையே விரிசலுக்கு காரணம் என கூறப்படுகிறது.







