கொரோனா வைரஸை பரப்ப தனியாக இருந்த இளம்பெண் செய்த கேவலமான செயல்!

சீனாவில் கொரோனா வைரஸை பரப்பும் நோக்கில் பெண்ணொருவர் லிப்டில் செய்த மோசமான செயலின் வீடியோ வைரலாகியுள்ளது.

சீனாவில் கொரோனா வைரஸால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 304ஆக உயர்ந்துள்ளது. இதோடு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் 14000-ஐ கடந்துள்ளது.

இந்நிலையில் சீனாவில் உள்ள ஒரு லிப்டில் பதிவான சிசிடிவி காட்சி வைரலாகியுள்ளது.

அதில் லிப்டில் தனியாக ஏறும் பெண் அங்குள்ள டிஷ்யூ பேப்பர்களை எடுத்து அதில் தனது எச்சிலை துப்புகிறார்.

கொரோனா வைரஸை பரப்புவதற்காகவே இவ்வாறான மோசமான செயலில் அவர் ஈடுபடுவதாக கூறப்படுகிறது.

அதே நேரத்தில் அப்பெண் மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணாகவும் இருக்கலாம் என ஒரு சாரார் கூறுகிறார்கள்.

இது தொடர்பான வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. வீடியோ பார்த்த பலரும் அப்பெண்ணை மோசமாக திட்டி தீர்த்துள்ளனர்.