மகளுடன் வெடித்து சிதறிய ஜாம்பவான் கோபி பிரையன்ட்! பேரழிவுற்கு காரணம் யார்?

கூடைப்பந்தாட்ட வீரரான கோபி பிரையன்ட், அவரது மகள் மற்றும் ஏழு பேருடன் விபத்துக்குள்ளான ஹெலிகாப்டரை வைத்திருக்கும் நிறுவனம் பனிமூட்ட நிலையில் பறக்க உரிமம் பெறவில்லை என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.

லாஸ் ஏஞ்சல்ஸின் மேற்கே ஏற்பட்ட ஹெலிகாப்டர் விபத்துக்கான காரணம் இன்னும் ஆராயப்பட்டு வருகிறது. பனிமூட்டமான வானிலையே விபத்திற்கு முக்கிய காரணம் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

ஐலண்ட் எக்ஸ்பிரஸ் நிறுவனத்திற்கு சொந்தமான ஹெலிகாப்டர்கள், பார்வை சம்பந்தமான விமான விதிகள் என அழைக்கப்படுபவற்றின் கீழ் பறப்பதற்கு தடை விதிக்கப்பட்டன.

அதாவது விமானிகள் பகல் நேரத்தில் விமானத்திற்கு வெளியே தெளிவாகக் காண முடிய வேண்டும் என்று தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியத்தின்செய்தித் தொடர்பாளர் கீத் ஹோலோவே தெரிவித்தார்.

ஓட்டுநர் அறை கருவிகளைப் பயன்படுத்தி தனியாக விமானத்தை இயக்க நிறுவனத்திற்கு அனுமதி அளிக்கப்படவில்லை.

விபத்துக்குள்ளான நேரத்தில் விமானி ஓட்டுநர் அறை கருவிகளில் விமானத்தை இயக்கினாரா என்பது தெரியவில்லை என்று கீத் ஹோலோவே கூறினார்.

ஓட்டுநர் அறையில் இருக்கும் கருவிகளை மட்டுமே நம்பி ஹெலிகாப்டரை இயக்க விமானி மத்திய அரசின் சான்றிதழ் பெற்றதாக கூறப்படுகிறது.

இருப்பினும் அவ்வாறு ஹெலிகாப்டரை இயக்குவதில் அவருக்கு அதிக அனுபவம் இருந்திருக்க வாய்ப்பில்லை என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

இதன் காரணமாக தான் அவருக்கு நிறுவனத்தின் உரிமம் தடைசெய்யப்பட்டது என கூறப்படுகிறது.