காலையில் உண்ண வேண்டிய உணவுகள்..!!

காலை வேளையில் நமக்கும் சரி, நமது குழந்தைகளுக்கும் சரி.. அவர்கள் வேலைகளுக்காக அல்லது பள்ளிகளுக்காக கிளம்பும்போது இட்லி, தோசை போன்ற உணவுகளை உண்பதற்கு கூட அவதிப்பட்டு வருகின்றனர்.

இன்னும் சிலர் இதனை உண்ண இயலாமல் அப்படியே பணிகளுக்கும், பள்ளிகளுக்கும் சென்று வருகின்றனர். காலை உணவு என்பது நமது உடலுக்கு முக்கியமான தேவைகள் ஒன்றாகும்.

ஆகையால் காலை உணவு எடுத்துக் கொள்வதில் சில உணவு முறைகளை பார்க்கலாம். முட்டை சாப்பிடும் பழக்கம் இருக்கும் நபர்கள் காலையில் முட்டையை எடுத்துக்கொள்வது சக்தியையும், வயிறு நிறைவான ஒரு உணர்வையும் கொடுக்கும்.

மேலும் மதிய உணவு நொறுக்குத் தீனி எடுத்துக் கொள்ளாமலும் வைத்திருக்கும், இது நமது மூளை மற்றும் கல்லீரலுக்கு சிறந்த உணவாக அமைகிறது.

முட்டையில் புரதம் அதிக அளவில் நிறைந்துள்ளது. இது பசியைக் கட்டுப்படுத்துகிறது. இன்றுள்ள பெரும்பாலான நபர்கள் ஓட்ஸை காலை உணவாக விரும்புகின்றனர்.

இதில் இருக்கும் நார்ச்சத்து உடலுக்கு தேவையான பல நன்மைகளை அளிக்கிறது. மேலும் உடலில் கொலஸ்ட்ரால் குறைகிறது. வயிறு நிறைந்த உணர்வும் இருக்குமென்பதால், மதியம் வரை எந்தவிதமான பிரச்சினையும் கிடையாது. நமது இதயம், உயர்ரத்த அழுத்தம் குறைப்பு போன்ற பிரச்சனைகளை சரி செய்கிறது.

இதனைப்போன்று பாதாம் பருப்பு, பிஸ்தா பருப்பு போன்ற வகைகளையும் சாப்பிடலாம். மேலும், பப்பாளி பழம், ஆரஞ்சு பழம் போன்றவற்றை உணவில் சேர்த்துக்கொள்ள மூளையும் நரம்பு மண்டலமும் சுறுசுறுப்பாக செயல்படும்.