பிரபல விருது விழா பற்றி கோபமாக பதிவிட்ட பிரபல நடிகர்!

நடிகர் பார்த்திபன் இயக்கி நடித்த ஒத்த செருப்பு சைஸ் 7 படம் சென்ற வருடம் ரிலீஸ் ஆகி நல்ல வரவேற்பை பெற்றது. படம் ஆஸ்கர் லிஸ்டில் இடம்பெற்றதாக அவரே பதிவிட்டிருந்தார்.

அதன்பிறகு சென்ற மாதம் நடைபெற்ற ஒரு பிரபல இதழ் நடத்திய விருது விழாவில் அவர் பங்கேற்றார். ஆனால் ஒத்த செருப்பு படத்திற்கு எந்த விருதும் தரப்படவிலை. இதனால் கோபமான அவர் ட்விட்டரில் ஆதங்கத்துடன் பதிவிட்டிருந்தார்.

இன்று அந்த நிகழ்ச்சி டிவியில் ஒளிபரப்பட்டுள்ளது. அது பற்றி ட்விட்டரில் பேசியுள்ளார் பார்த்திபன் “நல்ல கலைக்கே விருதில்லை, இதில் மகா என கலாய் வேறு !” என கூறி தன் கோபத்தை பதிவு செய்துள்ளார்.