இந்தியாவில் பெண்களுக்கு எதிரான அநீதிகள் தொடர்ந்து வருகிறது. மேலும், நாளொன்றுக்கு சராசரியாக 90 க்கும் அதிகமான பாலியல் பலாத்காரங்கள் குறித்த புகார்கள் காவல் நிலையத்தில் பதியப்படுவதாக ஆய்வறிக்கைகள் வெளியானது.
இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னதாக ஆக்ராவில் உள்ள கல்லூரியில் பயின்று வரும் மாணவி பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாக்கப்பட்டு, பெண்ணுறுப்பு மோசமாக பாதிக்கப்பட்ட நிலையில், மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டுள்ளார்.
மாணவிக்கு முதலில் சிகிச்சையை துவக்கிய மருத்துவர்கள், இது தொடர்பாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலை அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள், இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டனர்.
இந்த விசாரணையில், ஆக்ராவில் உள்ள குடியிருப்பில் பெண் கொடூரமாக பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். ஆக்ராவில் உள்ள ஏவியேஷன் கல்லூரியில் டிப்ளமோ பயின்று வரும் நபரின் பெயர் தர்ஷ் கவுதம் (வயது 23).
இவன் இதே கல்லூரியில் பயின்று வரும் மாணவியின் இன்ஸ்டாகிராம் கணக்கினை பின்தொடர்ந்து நட்பாக பழகி வந்துள்ளான். இந்நிலயில், கடந்த புதன்கிழமையன்று இருவரும் விடுதியில் அறையெடுத்து தங்கிய நிலையில், இருவரும் மது அருந்தியுள்ளனர்.
பெண் மதுவின் மயக்கத்தில் உறங்கிவிடவே, நண்பன் என்று நம்பி சென்ற பெண்ணை காமுகன் பாலியல் பலாத்காரம் செய்துள்ளான். மேலும், பெண் போதையில் இருந்த நிலையில், பெண்ணின் பெண்ணுறுப்பில் மதுபானத்தை ஊற்றி பாலியல் பலாத்காரம் செய்துள்ளான்.
இதனால் பெண்ணின் பிறப்புறுப்பு கடுமையாக சேதமடைந்த நிலையில், இரவு முழுவதும் போதையில் பலமுறை பாலியல் பலாத்காரம் செய்ததில் பெண்ணின் பெண்ணுறுப்பு காயமடைந்துள்ளது. இதனையடுத்து பெண்ணை அப்படியே விட்டுவிட்டு சென்றுள்ளான்.
பின்னர் அக்கம்பக்கத்தினர் பெண்ணை மீட்டு அங்குள்ள மருத்துவமனையில் அனுமதி செய்துள்ளனர். இந்த விஷயம் விசாரணையில் வெளிவந்ததை அடுத்து, வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் கொடூரனை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இது தொடர்பான விசாரணையும் நடைபெற்று வருகிறது.







