லிங்கா பட நடிகையை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்!

நடிகர் ரஜினியின் லிங்கா படத்தில் ஹீரோயினாக நடித்தவர் சோனாக்ஷி சின்ஹா. அவர் தற்போது பாலிவுட் படங்களில் மட்டுமே நடித்து வருகிறார்.

இந்நிலையில் இவர் சமீபத்தில் ட்ராபிக் அதிகம் உள்ள ஒரு ரோட்டில் பைக் ஒட்டி சென்றுள்ளார். அந்த விடியோவும் வெளியாகி வைரலாகியுள்ளது.

அதை பார்த்துவிட்டு நெட்டிசன்கள் பலரும் அவரை ட்ரோல் செய்து வறுத்தெடுத்து வருகின்றனர். சோனாக்ஷி பைக்கில் சென்றாலும் அவரது பாதுகாவலர் கூடவே நடந்து செல்வது தான் அதற்கு காரணம்.

மேலும் மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தாமல் வேறு இடத்தில பைக் ஓட்ட கற்றுக்கொள்ளலாம் என்றும் அட்வைஸ் கொடுத்துள்ளனர் சிலர்.

 

View this post on Instagram

 

A post shared by Viral Bhayani (@viralbhayani) on