ஆண் போல வேடமிட்டு 50 சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த இளம்பெண்…..

இங்கிலாந்து நாட்டில் உள்ள வின்செஸ்டர் பகுதியை சார்ந்த பெண்மணியின் பெயர் ஜெம்மா வாட்ஸ் (வயது 21). இவர் இணையத்தளத்தில் தன்னை 16 வயதாகும் சிறுவன் என்று கூறி அறிமுகம் செய்துள்ளனர்.

மேலும்., தனது பெயரினை ஜெக்வாடன் என்று கூறி அறிமுகம் செய்துவிட்டு., சிறுவர்களை போன்றே உடையணிந்து கொண்ட புகைப்படங்களை பதிவு செய்துள்ளார்.

இதன் மூலமாக பல சிறுமிகளை தொடர்பு கொண்ட நிலையில்., சிறுவன் போலவே ஆசை வார்த்தைகளை வைத்து பேசி பழக்கத்தினை ஏற்படுத்தியுள்ளார். பின்னர் சிறுமிகளை நேரில் பார்க்கலாம் என்று கூறி ஆசையை ஏற்படுத்தியுள்ளார்.

இவரது பேச்சில் மயங்கிய சிறுமிகள் நேரில் சந்திக்க வருகை தரவே., சுமார் 50 க்கும் மேற்பட்ட பெண்களை அங்குள்ள விடுதிகளுக்கு அழைத்து சென்று கட்டாய பலாத்காரத்திற்கு உள்ளாக்கியுள்ளார்.

இதனால் பாதிக்கப்பட்ட சிறுமி தனது பெற்றோரிடம் இது தொடர்பாக தெரிவிக்கவே., இது குறித்த புகாரை ஏற்ற காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து ஜெம்மா வாட்ஸை கைது செய்தனர்.

காவல் துறையினரின் விசாரணைக்கு பின்னர் இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில்., இவ்வழக்கை விசாரணை செய்த நீதிபதி சுமார் 8 வருட சிறை தண்டனைக்கு உத்தரவிட்டார்.