Starlink எனப்படுவது அமெரிக்காவின் மிகப்பெரிய செயற்கைக்கோள் வலையமைப்பு ஆகும்.
இது இணைய வசதியை வழங்குவதற்காக உருவாக்கப்பட்டுள்ளது.
இச் செயற்கைக்கோள்கள் அனைத்தையும் தனியார் நிறுவனமான SpaceX விண்ணில் ஏவியுள்ளது.
இதுவரையில் சுமார் 182 விண்வெளி ஓடங்களை அனுப்பியுள்ள SpaceX நிறுவனம் மேலும் 60 செயற்கைக்கோள்களை பூமியின் ஒழுக்கில் நிலைநிறுத்தவதற்கு தயாராகிவருகின்றது.
இவை அனைத்தும் Starlink எனப்படும் இணைய சேவையினை வழங்குவதற்காகவே ஏவப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறெனினும் சுமார் 12,000 Starlink செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவுவதற்கு SpaceX நிறுவனம் அனுமதிபெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
From here to there. God speed. pic.twitter.com/mPZbivE54u
— Nick Patel (@nickpatel1983) January 7, 2020