இந்தியாவின் மத்திய பிரதேசம் மாநிலத்தில் போபால் பிஹெல் உள்ள 19 சிறுமி தனது பெற்றோருடன் வசித்து வந்துள்ளார். இவருக்கு அதே பகுதியை சார்ந்த வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இவர்களுக்குள் ஏற்பட்ட பழக்கமானது நட்பு ரீதியாக தொடர்ந்த நிலையில் பின்னாளில் இருவரும் காதலர்களாக மாறியுள்ளனர். இவர்கள் இருவரும் காதலித்து வந்த நிலையில்., இருவரும் அங்குள்ள பகுதியில் சந்தித்து பேசுவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
இந்நிலையில்., சம்பவத்தன்று சிறுமி தனது தனது காதலருடன் பேசிக்கொண்டு இருந்ததை இதே பகுதியை சார்ந்த ராம்பாபு மற்றும் ராகேஷ் ராஜ்கபூர் ஆகியோர் கவனித்துள்ளனர். இவர்கள் இருவரும் மது போதையில் இருந்துள்ளனர்.
இதனையடுத்து இவர்கள் இருவரும் சேர்ந்து சிறுமி காதலருடன் பேசிக்கொண்டு இருக்கும் காட்சிகளை அலைபேசியில் பதிவு செய்து., சிறுமியிடம் காட்டி மிரட்டியுள்ளனர்.
இவர்களது மிரட்டலுக்கு சிறுமி துவக்கத்தில் பயம் கொள்ளாமல் இருந்த நிலையில்., இந்த விடியோவை இணையத்தில் பரப்பிவிடுவதாக மிரட்டியுள்ளனர். இதனால் செய்வதறியாது திகைத்த சிறுமியை இருவரும் சேர்ந்து கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
மேலும்., இது தொடர்பாக பாதிக்கப்பட்ட சிறுமி பெற்றோரிடம் தெரிவித்த நிலையில்., இது குறித்த புகாரை காவல் துறையினர் துவக்கத்தில் ஏற்க மறுத்து பின்னர் விசாரணையை துவக்கியதாக கூறப்படுகிறது. குற்றவாளிகள் இருவரும் தற்போது நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு சிறையில் உள்ளனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.







