யாஷிகாவிற்கு சாவல் விடும் நடிகை இனியா…..

சமீபகாலமாக நடிகைகள் அவர்களது கவர்ச்சி புகைப்படங்களை அவ்வப்போது சமூகவலைதங்களில் வெளியிடுவது வழக்கம். அந்த வரிசையில் தற்போது நடிகை இனியாவும் வந்துவிட்டார்.

இவர் தமிழ் சினிமாவில் பல்வேறு படங்களில் நடித்துள்ளார். வாகை சூடவா, மௌனகுரு, புலி வால் போன்ற படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

மேலும், சமீபத்தில் இவர் நடித்து வெளியான படம் மாமாங்கம். இந்த படத்தில் நடிகர் மம்முட்டியுடன் முக்கிய கதாபாத்திரத்தில் இணைந்து நடித்து ரசிகர்களை மிரள வைத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், இனியாவின் சமீபத்திய கவர்ச்சி புகைப்படங்கள் சில இணையத்தில் வைரலாகி வருகிறது. குடும்ப பாங்கான பெண்ணகவே தமிழ் சினிமாவில் பார்த்த அவரது ரசிகர்களுக்கு இது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.