பிரதி பொலிஸ்மா அதிபராக பதவியேற்றதும் வவுனியாவில் முதலாவது சந்திப்பை மேற்கொண்டர்.

வன்னி பிராந்திய பிரதி பொலிஸ்மா அதிபராக இன்று கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்ட தம்மிக்க பிரியந்த வவுனியாவில் ஊடகவியலாளர்களுடன் முதல் சந்திப்பை மேற்கோண்டார்.

மக்களுடன் நெருக்கமாக பழகுபவர்கள் ஊடகவியலாளர்களே என்ற வகையில் வவுனியா மக்கள் எதிர் நோக்கும் விடயங்கள் வவுனியாவில் பொலிஸாரால் மக்களுக்கு மேற்கொள்ளப்பட வேண்டிய விடயங்கள் தொடர்பாக இதன் போது கேட்டறிந்து கொண்டார்.

இந்நிலையில் டெங்கு கட்டுப்பாட்டுக்காக முன்னெடுக்க வேண்டிய செயற்பாடுகள், விபத்துக்களை குறைப்பதற்கு எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் மற்றும் கால்நடையால் ஏற்படும் விபத்துக்களை கட்டுப்படுத்த எடுக்க வேண்டிய பொறிமுறைகள் தொடர்பாகவும் பிரதி பொலிஸ்மா அதிபருக்கும் ஊடகவியலாளர்களுக்குமிடையில் கலந்துரையாடல் இடம் பெற்றது.

இதேவேளை அவரச அழைப்பின் போது பொலிஸார் தாமதமாக குறித்த பகுதிக்கு வருகின்றமை மற்றும் வைரவபுளியங்குளம் வைரவர் கோவில் வீதியில் அதிவேகமான மோட்டார் சைக்கிள் செலுத்தப்படுகின்றமை எனவே குறித்த பகுதியில் பொலிஸ் காவலரணின் முக்கியத்துவம் தொடர்பிலும் இதன் போது எடுத்துக் கூறப்பட்டது.

இந்நிலையில் மாதாந்தம் ஊடகவியலாளர்களுடனான கலந்துரையாடல் இடம்பெற ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டதுடன் மக்கள் தமது பிரச்சனைகளை நேரடியாக தன்னுடன் தொடர்பு கொண்டு கலந்துரையாடவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதுடன் பிரதி பொலிஸ்மா அதிபர் காரியாலய வாயிற் கதவு மூடப்படாது திறந்தே இருக்கும் எனவும் பிரதி பொலிஸ்மா அதிபர் தெரிவித்தார்.