பிரபல தொகுப்பாளினிக்கு திடீர் திருமணம்! வெளியான புகைப்படம்

ஒரு காலத்தில் முன்னணி தொலைக்காட்சியில் நிகழ்ச்சியில் தொகுப்பாளினியாக வளம் வந்த திவ்யா திடீர் என்று திருமணம் செய்து கொண்டுள்ளார்.

இது குறித்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது.

பல நிகழ்ச்சிகளுக்கு தொகுப்பாளினியாக இருந்த திவ்யா குறித்து சில வருடங்களாக எந்த தகவலும் கிடைக்கவில்லை. அவரை தொலைக்காட்சி பக்கமே காணவில்லை.

 

View this post on Instagram

 

Wishing @divuvj and Shibu always the best and a happy Married Life together! Such a beautiful wedding! #difoundherbu

A post shared by Haricharan Seshadri (@haricharanmusic) on


அதற்கு என்ன காரணம் என்று தெரியாமல் ரசிகர்கள் புலம்பியுள்ளனர். இந்நிலையில் இவர் குறித்து ஒரு சந்தோசமான செய்தி சமூக வலைத்தளங்களில் கசிந்துள்ளது.

கடந்த டிசம்பர் 27 ஆம் திகதி திவ்யாவுக்கு திருமணம் நடந்து உள்ளது. தொகுப்பாளினி திவ்யா தனது நீண்ட நாள் நண்பரான சிபு தரகன் என்பவரை காதலித்துள்ளார்.

இவர்கள் இருவரும் பெற்றோர்கள் சம்மதத்துடன் தற்போது திருமணம் செய்து கொண்டு உள்ளார்கள்.

இவர்கள் திருமணத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.இதனால், ரசிகர்கள் மகிழ்ச்சியுடன் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.