பரந்து விரிந்த கடல்கள், உயர்ந்திருக்கும் இருக்கும் மலைகள் என்று இயற்கையின் கொடைகளில் ஆயிரக்கணக்கான ஆச்சரியங்கள் ஒளிந்து கிடக்கின்றன.
பார்க்கப் பார்க்க வியப்பு விலகாத இயற்கை சில நேரங்களில் சவால்களையும் அளிக்கிறது.
அப்படி ஒரு காட்சி தான் இது. வட கிழக்கு மாநிலங்களில் ஒன்றாக மிசோரம் முழுவதுமே மலைப்பாங்கான பகுதிதான் உள்ளது. அம்மாநிலத்தில் மலை உச்சியொன்றில் எடுக்கப்பட்ட காட்சி இது.
Clouds Floating Down the Mountains in the City of Aizawl, Mizoram
Publiée par Aziz Barbhuiya sur Vendredi 22 novembre 2019
நீர் வீழ்ச்சி மலைச்சரிவில் கொட்டுவது போல உள்ளது. ஆனால், இயற்கை அங்கேதான் தனது ஆச்சரியத்தை ஒளித்து வைத்துள்ளது. மேகங்கள் மலைகளின் வழியே கீழே இறங்குவதன் காட்சிதான் அது.
இந்த இயற்கை அதிசயத்தின் காட்சி தற்போது இணையத்தில் வைரலாகி மில்லியன் பேரை ரசிக்க வைத்துள்ளது.







