பிக் பாஸ் நிகழ்ச்சி முடிவடைந்து பல மாதங்கள் கடந்து விட்டாலும் அது பற்றிய பேச்சுக்கள் அடிக்கடி இணையத்தில் உலாவி கொண்டு தான் இருக்கிறது.
தற்போது, 2019ம் ஆண்டின் சிறந்த டிவி பிரபலம் யார் என்ற போட்டியில் பிக்பாஸ் போட்டியாளர் கவினுக்கும் இந்தி பிக்பாஸ் போட்டியாளர் அசிம் ரியாஸுக்கு இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.
கவினை வெற்றியடைய செய்ய ரசிகர்கள் தொடர்ந்தும் ட்விட்டரில் #2020isyoursKAVIN ஹாஷ்டேக்கை டிரெண்ட் செய்து வருகின்றனர்.
Television Personality of the year 2019?#AsimRiaz#ShehnaazGilll#SiddhartShukla#Kavin#BB13 #WeekendKaVaar #BBL09 #ColorsTV #SalmanKhan #srk #UPpolice #Kavinarmy #BJP #StayStrongSidharthShukla #ProudOfShehnaaz #StopBullyingAsim #KamalHaasan #BiggBoss #BB13 #BiggBossTamil
— Indian Cinema Polls ™ (@IndianCiniPolls) December 28, 2019
பிக்பாஸ் சீசன் 13 போட்டியாளரான அசிம் ரியாஸ், பெண் போட்டியாளர் ஷெனாஸ் கில், சித்தார்த் சுக்லா மற்றும் தமிழ் பிக்பாஸ் போட்டியாளர் கவின் ஆகிய 4 பேர் இந்த போட்டியில் இடம்பெற்றுள்ளனர்.
இதுவரை இந்த போல் போட்டியில் இந்தி பிக்பாஸ் போட்டியாளர் அசிம் ரியாஸ் முன்னணியில் இருக்கிறார். அவருக்கு அடுத்தபடியாக தமிழ் போட்டியாளர் கவின் உள்ளார்.
Advance happy new year thala
intha year unoda success ha Pakka we are waiting #2020isyoursKAVIN
#2020isyoursKAVIN pic.twitter.com/TRdO1vl6GS— Kavin2020 (@KavinLiya2020) December 29, 2019
இதேவேளை, அண்மையில் பிரபல ஊடகம் நடத்திய விருது விழாவில் கவினுக்கு கோல்டு மெடல் விருது வழங்கப்பட்டது. அதனை தொடர்ந்து #2020isyoursKAVIN ஹாஷ்டேக்கை மேலும் வலுப்படுத்தி வருகின்றனர்.
அது மட்டும் இன்றி கவின் குறித்த காணொளிகளையும் வைரலாக்கி வருகின்றனர். மேலும், கவின் ஹாஷ்டேக் டிரெண்டாகி வருவதற்கு லொஸ்லியா ஆர்மியும் ஒரு காரணமாக இருக்கிறது.
இறுதியில் முதலிடத்தை பெறபோவது அசிம் ரியாஸா அல்லது கவினா என்று பொருத்திருந்து பார்ப்போம்.
#2020isyoursKAVIN KAVIN Anna advance happy new year wishes ???????
???????? pic.twitter.com/dC615pfbEk
— NAMAKKAL DISTRICT KAVIN FANS CLUB (@NamakkalClub1) December 29, 2019