பச்சை வண்ண உடையில் கவர்ச்சி போஸ் கொடுத்த டிடி..

பிரபல தனியார் தொலைக்காட்சி ஒன்றில் தொகுப்பாளினியாக இருந்தவர் டிடி என்கிற திவ்யதர்ஷினி. இவர் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர். தொலைக்காட்சி ரசிகர்கள் பலருக்கு மிகவும் பழக்கப்பட்ட மற்றும் பிடித்தமான தொகுப்பாளினி.

மேலும், 20 வருடங்களாக சின்னத்திரையில் அவர் வெற்றி நடைபோட்டு வருகின்றார். விருது விழாக்கள், போட்டியில் நடுவர், நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குதல், சினிமாக்களில் சில முக்கிய கதாபாத்திரங்கள் என அசத்தி ரசிகர்களை தனக்கென வைத்திருப்பவர் டிடி. இருபது வருடங்களாக சின்னத்திரையை கலக்கியவர் என்ற அங்கீகாரமும் அவருக்கு சமீபத்தில் கொடுக்கப்பட்டது.

இந்நிலையில் தற்போது டிடி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், பச்சை நிற ஆடையில் பல விதமாக போஸ் கொடுத்த புகைப்படத்தை பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.