குடியுரிமை சட்டத்துக்கு எதிராக போராடுபவர்களை………சரமாரியாக வறுத்தெடுத்த நடிகை……..

போராட்டத்தின் போது, பேருந்துகளை, ரயில்களை எரிக்கவும், இதர பொதுச்சொத்துகளை எரிக்க, யார் அதிகாரம் கொடுத்தது, என வன்முறையாளர்களை நோக்கி, நடிகை கங்கனா ரணாவத், காட்டமாக கேள்வி எழுப்பி உள்ளார்.

இதுகுறித்துப் கங்கனா ரணாவத் பேசியதாவது , போராட்டம் நடத்துபவர்கள் வன்முறையில் ஈடுபட மாட்டோம் என்பதை முதலில் சபதம் ஏற்க வேண்டும் என்றும் ஜனநாயகம் என்ற பெயரில் சிலர் வன்முறையைத் தூண்டுவது சரி அல்ல என குறிப்பிட்டார்.

 

பொது மக்களுக்காக இயக்கப்படும் ஒரு பேருந்தை வாங்குவதற்கு நிறைய செலவாகிறது. அது ஒரு சிறிய தொகையும் அல்ல. இந்தியாவில் தற்போதைய உண்மை நிலை என்னவென்றால், ஊட்டச்சத்துக் குறைபாட்டால் பலர் இறந்து வருகின்றனர். இவற்றையெல்லாம் கருத்தில் கொள்ளாமல் கலவரத்தை உருவாக்கி பொது சொத்துக்களை சேதப்படுத்துகின்றனர்.

இந்தியாவில் மொத்தமுள்ள மக்கள் தொகையில், மூன்று முதல் 4 சதவிகிதம் பேர் மட்டுமே வரி செலுத்தும் நிலையில் இருப்பதாகவும், இந்த சதவிகித நபர்களை சார்ந்துதான், மற்றவர்கள் இருப்பதாகவும், கங்கனா குறிப்பிட்டிருக்கிறார்.

நாட்டின் நிலைமை இப்படி இருக்கும்போதும், போராட்டத்தின் போது, ரயில், பேருந்து உள்ளிட்ட பொதுச்சொத்துகளை எரிக்க யார் அதிகாரம் அளித்தது என வன்முறையாளர்களை நோக்கி கங்கனா ரணாவத் வினா கேள்வி எழுப்பியுள்ளார்.