முகத்தில் வரும் கரும்புள்ளிகளை அகற்ற இதோ டிப்ஸ்..!

முகப்பரு வந்தவுடன் அதை ஆரம்பத்திலேயே கிள்ளி எறிய வேண்டும் என்ற எண்ணத்துடன் பருவை கிள்ளி விடுகின்றனர். பரு சிதைந்து நாளடைவில் கரும்புள்ளிகளாக மாறுகின்றன. அவற்றை நீக்க சில இயற்கை வழிமுறைகளை பார்ப்போம்.

அரிசி மாவை தண்ணீர் விட்டு கலக்கி முகத்தில் பூசி சிறிது நேரம் கழித்து கழுவி வர கரும்புள்ளிகள் மறையும்.

கோதுமை தவிட்டுடன் பால் கலந்து முகத்தில் தடவி வர சில நாட்களில் கரும்புள்ளிகள் மறைந்துவிடும்.

வெந்தயக் கீரையை நன்கு அரைத்து பேஸ்ட்செய்து முகத்தில் தடவி வந்தால், விரைவில் முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள் நீங்கிவிடும்.

முருங்கை இலைச்சாறு, எலுமிச்சை சாறு மற்றும் தேன் கலந்து தடவினால், கரும்புள்ளிகள் நீங்கும்.

இலுப்பை இலையை மைபோல் அரைத்து இரவில் பூசி காலையில் கழுவி வந்தால் கரும்புள்ளிகள் நீங்கி முகம் பளபளப்பாகும்.

ரோஜா இதழ் மற்றும் பாதாம் பருப்பை அரைத்து முகத்தில் தேய்த்து, சிறிது நேரம் கழித்து கழுவி வர, கரும்புள்ளிகள் மறையும்.

வெள்ளரிச்சாறு, புதினாச்சாறு, எலுமிச்சை பழச்சாறு ஆகியவைகளை சம அளவில் கலந்து முகத்திலுள்ள கரும்புள்ளிகளின் மீது தேய்த்து வந்தால் கரும்புள்ளிகள் போய்விடும்.

முட்டையின் வெள்ளைக் கருவை நன்றாக கலந்து, முகத்தில் தேய்த்து காய்ந்ததும், அவற்றின் மீது தண்ணீர் தடவி தேய்த்தால், கரும்புள்ளிகள் நீங்கும்.

முட்டைகோஸஷுடன் பன்னீர் ரோஜாவை மசித்து அதில் பால் மற்றும் தேனை கலந்து முகத்தில் தேய்த்து சில நிமிடங்கள் கழித்து கழுவ வேண்டும். இவ்வாறு வாரம் ஒருமுறை செய்தால், கரும்புள்ளிகள் நீங்கும்.

ஜாதிக்காயை அரைத்து முகத்தில் தடவி 30 நிமிடம் கழித்து கழுவி வர கரும்புள்ளிகள் மறையும்.

இரண்டு டேபிள் ஸ்பூன் தயிரை, ஒரு டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாற்றுடன் கலந்து, தடவி வந்தால், கரும்புள்ளிகள் போய்விடும்.

உருளைக்கிழங்கை வெட்டி கரும்புள்ளிகளின் மீது தேய்த்து வர கரும்புள்ளிகள் மறையும்.

மஞ்சளுடன் கருவேப்பிலை சாறு சேர்த்து முகத்தில் தடவி வர கரும்புள்ளிகள் மறையும்.

கற்றாழை ஜெல்லை முகத்தில் நாள்தோறும் தடவி வந்தால் முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் மறைந்துவிடும்.

தினமும் ஒன்று அல்லது இரண்டு கப் க்ரீன் டீ அருந்தி வந்தால், முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் மறைந்துவிடும்.