காதலை நிரூபிப்பதற்காக கொலை செய்யச் சொன்ன காதலி! அதன் பின்னர் நடந்த கொடூர சம்பவம்!!

தன்னுடனான காதலை நிரூபிப்பதற்காக, காதலனின் முன்னாள் காதலியை கொலை செய்யச் சொன்ன கொடூர காதலி, காதலனுடனேயே சிறைக்கு போகிறார்.

Rhett Carty-Shaw (17) என்பவர் Sarah Mohamed (17) என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார். Shawவின் முன்னாள் காதலி Iman Nassir (17).

Sarahவை காதலிக்கும் நிலையிலும் Nassirஉடன் தொடர்பிலிருந்திருக்கிறார் Shaw. இந்த விடயம் தெரியவந்ததும் கோபமடைந்த Sarah, தன் காதலனிடம் சண்டையிட்டுள்ளார். தன்னை காதலிப்பது உண்மை என்றால் Nassirஐ கொலை செய்யவேண்டும் என்று கூறியுள்ளார் Sarah.

அதன்படி ஒரு நாள் Nassirஐ காண சென்றுள்ளனர் இருவரும். Nassirஇன் வீட்டிற்குள் Shaw செல்ல, Sarah வீட்டுக்கு வெளியே நின்றிருக்கிறார். வீட்டிற்குள் சென்ற Shaw, Nassirஉடன் இரண்டு மணி நேரம் செலவிட்டபின், அவருடன் பாலுறவு கொண்டிருக்கிறார்.

அவருடன் பிரியமாக இருப்பதுபோல் நடித்து, பின்னர் கத்தியால் Nassirஇன் உடலில் பல இடங்களில் குத்தியுள்ளார் Shaw.

தீர்ப்பின் போது இந்த சம்பவத்தை குறிப்பிட்ட நீதிபதி, எப்படிப்பட்ட மனிதர்கள் இதுபோல் நடந்துகொள்ள முடியும் என கடுமையாக காதலர்கள் இருவரையும் கடிந்துகொண்டது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், வீட்டிற்கு வெளியே நின்ற Sarah குறுஞ்செய்திகள் அனுப்பி Nassirஐக் கொலை செய்யும்படி Shawவை உற்சாகப்படுத்தியுள்ளார். ஆனால், அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பி விட்டார் Nassir.

Nassirஐ கத்தியால் குத்திவிட்டு, இரத்தக்கறை பட்ட உடை மற்றும் கத்தியுடன் பேருந்து நிலையத்தில் நின்ற Shaw வசமாக பொலிசாரிடம் சிக்கிக்கொண்டார்.

பலத்த காயம் ஏற்பட்டு, வேதனையில் தவித்த நிலையிலும், நீதிமன்றத்திற்கு தைரியமாக வந்த Nassir தன்னை கொல்ல முயன்றவர்கள் முன்னாலேயே சாட்சியமளித்தார். வழக்கை விசாரித்த நீதிபதி, Shaw மற்றும் Sarah இருவருக்கும் 16 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளார்.