இந்தியாவில் உள்ள மிசோரம் மாநிலத்தை சார்ந்தவர் லால் பாக்சுவாளா (வயது 22). இவர் கோவாவில் உள்ள அஞ்சுனா பகுதியில் இருக்கும் உணவகத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார்.
இந்த நிலையில்., கடந்த செவ்வாய்க்கிழமையன்று இரவு நேரத்தில்., இவர் பணியாற்றி வரும் உணவகத்திற்கு அருகேயுள்ள வீட்டிற்கு அத்துமீறி நுழைந்துள்ளான். மேலும்., வீட்டில் இருந்த 60 வயது பாட்டியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளான்.
60 வயது பாட்டி என்றும் பாராது பாலியல் வன்கொடுமை செய்த கொடூரன்., பாட்டியின் தலையில் தலையணையை வைத்து கொலை செய்ய முயற்சித்துள்ளான்.
பாட்டியின் கூச்சல் சத்தம் கேட்டு குழப்பத்தில் இருந்த பிற ஊழியர்கள்., பாட்டியின் இல்லத்தில் இருந்து சப்தம் வருவதை அறிந்து வீட்டிற்கு விரைந்து பாட்டியை காப்பாற்றினார். மேலும்., இந்த கொடூரத்தில் ஈடுபட்ட லாளை அடித்து நொறுக்கினர்.
பின்னர் இது தொடர்பாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்ததை அடுத்து., சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் லாளை கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். இந்த விஷயம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.