மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் படத்தில் இணைந்த இளம் நடிகர்

இயக்குனர் மணிரத்னம் அவர்கள் அடுத்து பிரம்மாண்டமாக இயக்கப்போகும் படம் பொன்னியின் செல்வன். படத்திற்கான படப்பிடிப்பு தாய்லாந்தில் கடந்த சில வாரங்களுக்கு முன் தொடங்கியது.

முதற்கட்ட படப்பிடிப்பில் கலந்து கொள்ள கார்த்தி, ஜெயம் ரவி போன்ற முக்கிற நடிகர்கள் எப்போதோ தாய்லாந்திற்கு சென்றுவிட்டனர்.

படத்தின் படப்பிடிப்பு நடந்துவரும் நிலையில் இதில் நடிக்க கமிட்டாகும் புதிய நடிகர்கள் பற்றிய விவரங்கள் வெளியாகிய வண்ணம் உள்ளது.

அஜித்தின் நேர்கொண்ட பார்வை படத்தில் முக்கிய வேடத்தில் நடித்த அர்ஜுன் சிதம்பரம் இப்படத்தில் சிறிய வேடத்தில் நடிக்க இருக்கிறாராம்.