தலைவர் 168 ஓப்பனிங் சாங் பற்றி வெளியான தகவல்

தர்பார் படத்தை தொடர்ந்து சிறுத்தை சிவா இயக்கத்தில் தலைவர் 168 என்ற தலைப்பில் நடித்து வருகிறார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த.

இப்படத்தில் குஷ்பூ, மீனா போன்ற எவர் கிரீன் நாயகிகளும் மற்றும் கீர்த்தி சுரேஷ், சூரி, சதீஷ் போன்ற இளம் நடிகர் நடிகைகளும் இணைந்து நடித்து வருகின்றனர்.

இப்படத்திற்கு டி. இமான் இசையமைத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் டி. இமான் இப்படத்திற்கான முதல் பாடலை பதிவு செய்ய போவதாக தகவல்கள் கசிந்துள்ளது. பிரபல பாடகரான எஸ்.பி.பி அவர்களின் மாஸான குரலில் பதிவு செய்ய உள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் பேட்ட, தர்பார் படத்தை தொடர்ந்து ரஜினிக்கு எஸ்பிபி அறிமுக பாடல் பாடியுள்ளது குறிப்பிடத்தக்கது.