‘நான் எதை தொட்டாலும் தங்கமாயிடும்’ என்று கூறிய மீரா மிதுன்…!!

நடிகை மீரா மிதுன் புகைப்படம் ஒன்றினை வெளியிட்டு, அதில் தற்பெருமை பேசியதற்கு நெட்டிசன்கள் கொடுத்த பதிலடி தாறுமாறாக அமைந்துள்ளது.

எப்பொழுதும் கவர்ச்சியாக காணொளி மற்றும் புகைப்படங்களை வெளியிட்டு மீரா மிதுனை இம்மாதிரியான காணொளியை தயவு செய்து போடாதீர்கள் என்று ரசிகர்கள் நேரடியாகவே கூறி வந்தனர்.

இந்நிலையில் எந்தவித கவர்ச்சியும் இல்லாமல் ஆடையை அணிந்துகொண்டு, தற்பெருமை பேசியுள்ளது நெட்டிசன்களை கொந்தளிக்க வைத்துள்ளது.

ஆம் மீரா மிதுன் தான் ராசியான பெண் என்றும் தான் தொட்டதெல்லாம் தங்கமாக மாறிவிடும் என்று கூறி பெருமைபட்டுக்கொண்டுள்ளார்.

இதற்கு பதிலளித்த ரசிகர்கள், தன்னைத் தொடுங்க தங்கமாக மாற வேண்டும் என்றும் மற்றொருவர் ஓவர் கான்ஃபிடன்ட் உடம்புக்கு ஆகாது என்றும் நீங்க சாப்பிடும் போது எப்படி மேனேஜ் பண்றீங்க.. எப்படியோ குட்லக் என்றும் கரன்ட்ட தொடுங்க மேடம் ஜி என்று வறுத்தெடுத்து வருகின்றனர்.

சிலர் மீரா மிதுனின் தோற்றத்தைக் கண்டு ஃபுல் ஆடை அலங்காரத்துடன் தற்போது தான் பார்ப்பதாகவும், வேறொருவர் அழகு, யாரு மீராவா? என்று கூறியுள்ளார்.