சிக்கன் வறுவல் ருசியாக இருக்க வேண்டுமா..?

இறால் துண்டு, வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு, கறிவேப்பிலை, உப்பு, சோம்பு, கடலைமாவு, அரிசிமாவு, பாசிப்பருப்பு மாவை சேர்த்து கலந்து சிறிது தண்ணீர் சேர்த்து உதிர்ந்து விடும் பக்குவத்தில் பிசைந்து இறால் பக்கோடா போடலாம்.

கறியை விரைவாக சமைக்க, அத்துடன் சிறிதளவு மசித்த பப்பாளியை சேர்த்தால் சீக்கரம் சமைத்து விடலாம். ருசியாக இருக்கும்.

நேந்திரம் பழ ஜாம் செய்யும் போது ஜாமுடன் தேங்காய் பால் சேர்த்துக் கொதிக்க விட்டு இறக்கினால் பாயாசம் தயார்.

சிக்கன், முட்டை, இறாலில் பஜ்ஜி செய்யும் போது மைதா சேர்த்தால் நன்கு கெட்டியாக ஆகும், மைதா சேர்ப்பதால் நல்ல ஷாப்டாகவும் இருக்கும்.

இறால் நான்கு நிமிடம் வெந்தால் போதும். அதற்கு மேல் வெந்தால், ரப்பரைப் போல் அழுத்தமாகி விடும். இறால் சமைக்கும் போது, இஞ்சியும் பு+ண்டும் அதிகம் சேர்க்க வேண்டும்.

கோழியின் தோல் பகுதிக்கு அடியில், அதிக கொழுப்பு படிந்துள்ளது. கோழி சமைக்கும் போது, அதிக கொழுப்புள்ள எண்ணெய், நெய் ஆகியவை சேர்த்து செய்யக் கூடாது.

கறிவேப்பிலையை நிழலில் உலர்த்தி இதனுடன் மிளகு, உப்பு, சீரகம், சுக்கு போன்றவற்றையும் சேர்த்து பொடியாக வைத்துக் கொண்டு குழம்பு, ரசம் ஆகியவற்றில் போட்டு சாப்பிடலாம். சுவையாக இருக்கும்.

இறாலை உரித்துக் கழுவியதும் சிறிது நேரம் மோரில் ஊறவிட்டால், வாடை குறைந்து விடும். சுவையும் கூடுதலாக இருக்கும்.

சிக்கன் வறுவல் செய்யும் போது கடைசியில் பட்டர், பொடித்த மிளகு, கறிவேப்பிலை, எலுமிச்சை சாற்றை சேர்த்து கொத்தமல்லியை தழை தூவி இறக்கினால் வறுவல் ருசியாக இருக்கும்.

இந்த தகவல் உங்களுக்கு பிடித்திருந்தால் செய்திபுனல் பேஜ் லைக் பண்ணுங்க பலோவ் பண்ணுங்க.