பாகுபலியை பின்னுக்குதள்ளி பிகில் செய்த சாதனை

தளபதி விஜய் ரசிகர்கள் மத்தியில் மட்டுமல்லாமல் வணிக ரீதியாகவும் பெரிதளவில் பேசப்பட்ட படம் பிகில்.

தீபாவளி அன்று ரசிகர்களுக்கு விருந்தாக வந்த பிகில் திரைப்படம் உலகளவில் 300 கோடி ரூபாய் வசூல் செய்தது என்று கூறப்படுகிறது. தயாரிப்பாளரே ட்விட்டரில் இந்த வருடத்தில் அதிகம் வசூல் செய்த படம் என தெரிவித்திருந்தார்.

அந்த வகையில் இதுவரை பாகுபலி 2 படம் தான் தான் தமிழ்நாடு ஷேரில் முதலிடத்தில் இருந்தது.

ஆனால் பிகில் பாகுபலி 2 சாதனையை முறியடித்து அந்த இடத்தை பிடித்துள்ளது என்று பிரபல விநியோகஸ்தர் ஒருவர் தெரிவித்துள்ளார். மேலும், இதனை ரசிகர்கள் இணையத்தில் பெரிதளவில் கொண்டாடி வருகிறார்கள்.