மதுர படத்தில் நடித்த நாயகியா இப்படி இருக்காங்க?.

மதுர படத்தில் நடித்த நாயகி ரஷிதா தற்போது அடையாளமே தெரியாத அளவிற்கு குண்டாகி போனது ரசிகர்களை அதிர்ச்சியுள்ளாக்கியுள்ளது.

2003 ஆம் ஆண்டு லிட்டில் சூப்பர் ஸ்டார் சிம்பு நடிப்பில் வெளியான தம் என்ற திரைப் படத்தின் மூலம் தான் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர்.

அதன் பின்னர், விஜய் நடிப்பில் வெளியான மதுர திரைப்படத்தில் நடித்தார். இந்த படத்தில் இரண்டு கதாநாயகிகள் இருந்தும். அதில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ரக்ஷிதா தான் நடித்து இருந்து ரசிகர்களை கவர்ந்திருந்தார்.

இவர், கர்நாடகாவில் பெங்களூரை சேர்ந்தவர். சினிமா பட வாய்ப்புகள் குறையவே, அரசியலில் பக்கம் சென்றார். அதன் பின்னர் பாஜக கட்சியில் இணைந்தார்.

கன்னட இயக்குனரான பிரேம் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். அதன் பின்னர் நடிப்புக்கு முட்டுக்கட்டை போட்டார். குடும்பங்களை கவனித்து வரும் இவருக்கு சூர்யா என்ற மகனும் உள்ளார்.