அடுத்தடுத்து ஏற்பட்ட அதிபயங்கர நிலநடுக்கம்

இந்த உலகம் முழுவதும் நிலநடுக்கம் என்பதும் தொடர்கதையாகியுள்ளது. உலகின் டெக்டானிக் தட்டுகள் என்று அழைக்கப்படும் நிலநடுக்கம் அதிகமாக ஏற்படும் பகுதிகளுக்கு அருகேயுள்ள நாடுகளில் நிலநடுக்கம் தொடர்கதையாகியுள்ளது.

உலகத்தின் அமெரிக்கா., பிலிப்பைன்ஸ்., இந்தோனேஷியா., ஆஸ்திரேலியா மற்றும் ஜப்பான் போன்ற நாடுகளில் அதிகளவு நிலநடுக்கம் ஏற்படுவது வழக்கம். மேலும்., இந்தியாவை ஒட்டியுள்ள பகுதிகளில் அவ்போது நிலநடுக்கம் ஏற்படும்.

மேலும்., நேற்று கூட இந்தியாவின் மஹாராஷ்டிராவில் நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில்., தற்போது பிலிப்பைன்ஸ் நாட்டில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

பிலிப்பைன்ஸ் நாட்டில் இருக்கும் தெற்கு பகுதியில் அமைந்துள்ள மிண்டானோ தீவில் மதியம் ஏற்பட்ட நிலநடுக்கமானது ரிக்டர் அளவு கோலில் 6.8 ஆக பதிவாகியுள்ளது. மேலும்., இதனைத்தொடர்ந்து தற்போது ஏற்பட்டுள்ள நிலநடுக்கம் 4.7 ஆக பதிவாகியுள்ளது.

இதனால் அங்குள்ள கட்டிடங்கள் அனைத்தும் பயங்கரமாக குலுங்கிய நிலையில்., சேதம் குறித்த விரிவான தகவல் வெளியாகவில்லை. அடுத்தடுத்து தொடர்ந்து நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர்.