நித்யானந்தா பதுங்கியிருப்பது எங்கு தெரியுமா..?

நித்தியானந்தா ஹைதி நாட்டில் பதுங்கியிருப்பதாக பிரிட்டனில் உள்ள ஈக்குவடார் தூதர் அதிகாரப்பூர்வ தகவலை வெளியிட்டுள்ளார் .

பாலியல் சர்ச்சை, குழந்தைகளை கடத்தி துன்புறுத்திய குற்றம் என பலதரப்பட்ட வழக்குகளில் தெடப்பட்டு வரும் நபர் நித்யானந்தா சில தினங்களாக தலைமறைவாகியுள்ளார்.

இந்நிலையில், குஜராத் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில், நித்யானந்தாவை தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர் பொலிசார். இந்நிலையில், வெளியுறவுத் துறையும் அவரது இருப்பிடத்தை அறிய முடியாமல் தடுமாறி வருவதாக கூறி இருந்தது.

இந்நிலையில், நித்தியானந்தாவின் இருப்பிடம் பற்றி அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இந்த தகவலை, பிரிட்டனில் உள்ள ஈக்குவடார் தூதர் வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக தூதர் ஜெமி மார்சன் ரோமிரோ வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:

நித்தியானந்தா 5 ஆண்டுகளுக்கு முன்பாக பயணியாக ஈக்குவடார் நாட்டுக்கு வந்திருக்கிறார். அங்கிருந்து அவர் விண்ணப்பம் அனுப்பினார். அவற்றை ஆய்வு செய்து, 12 மாதங்கள் தங்குவதற்கான குறுகிய கால விசா நித்தியானந்தாவுக்கு வழங்கப்பட்டுள்ளது.

அதே நேரத்தில், ஈக்குவடார் தேசிய ஆணையமானது அகதி அந்தஸ்து தருமாறு நித்தியானந்தா கோரிய விண்ணப்பத்தை நிராகரித்தது. அதை ஏற்க மறுத்த நித்யானனதா, அந்நாட்டின் நீதிமன்றத்தை நாடினார்.

அதன் பிறகு அங்கிருந்து ஹைதி நாட்டுக்கு சென்றுவிட்டார் என்று கூறி இருக்கிறார். ஆக மொத்தம் நித்தியானந்தா ஹைதி நாட்டில் பதுங்கியிருக்கிறார் என்று உறுதியாக தெரியவந்துள்ளது.