விஜய் அடுத்தடுத்து படங்கள் நடித்து பிஸியாக இருக்கிறார். தன்னுடைய 64வது படத்திற்காக கர்நாடகா சென்றுள்ளார், அங்கு ஒரு பிரபல சிறையில் படப்பிடிப்பு நடக்க இருக்கிறது.
அதோடு படப்பிடிப்பு நடக்கும் வேலையில் விஜய்யின் படம் ரூ. 55 கோடி வரை வியாபாரம் தற்போது ஆகியுள்ளது. படத்திற்கான ஃபஸ்ட் லுக்கும் இந்த மாத இறுதியில் வந்துவிடும் என்கின்றனர்.
தற்போது என்ன தகவல் என்னவென்றால் அசுரன் என்ற வெற்றிப் படத்தை அண்மையில் கொடுத்த இயக்குனர் வெற்றிமாறன், விஜய்யை நேரில் சந்தித்துள்ளாராம்.
அவரிடம் ஒரு புதிய கதையை கூற விஜய் பக்கம் கதை ஓகே செய்யப்பட்டுள்ளது போல் தெரிகிறது. இந்த கூட்டணி அமைந்தால் விஜய்யின் 65வது படத்தை வெற்றிமாறன் இயக்கலாம் என்கின்றனர்.