இந்திய வானிலை மையம் வெளியிட்ட தகவல்.!

தமிழகத்தில் வட கிழக்கு பருவமழை தற்போது தீவிரம் அடைந்துள்ள நிலையில், கடந்த வாரம் முழுவதும் தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை பெய்தது.

இது வரை பெய்த மழைகள் எல்லாம் வெப்ப சலனம் காரணமாக அல்லது வளி மண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழகத்தில் போதிய அளவுக்கு மழை பெய்யுள்ளது.

இந்நிலையில் தென்மேற்கு அரபிக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது புயலாக மாறியது. இது தொடர்பாக இந்திய வானிலை மையம் விடுத்துள்ள செய்தி குறிப்பில், தென்மேற்கு அரபிக்கடலில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறியதாகவும், அந்த புயலுக்கு பவன் என பெயரிடப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

தற்போது உருவாகியுள்ள பவன் புயலால் இந்திய துணை கண்டத்திற்கு மழையோ, அல்லது புயல் தாக்கமோ இருக்காது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், பவன் புயலானது மேற்க்கு நோக்கி நகர்ந்து ஓமன் கடற்கரையை அடையும் என்றும் இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.