பெட்ரோல், டீசல் விலை குறைவு.!

தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலையானது மாற்றி அமைக்கப்பட்டு வருகின்றது. அந்த வகையில், இன்று சென்னையில் டீசல் மற்றும் பெட்ரோல் விலை நிலவரம் குறித்து தற்போது காண்போம்.

மாதம் இருமுறை எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை மாற்றி அமைத்து வந்தது. சில காலங்களாக இந்த முறை கைவிடப்பட்டு அன்றாட பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நிர்ணயிக்கும் முறையானது அமலுக்கு வந்தது.

இதனைத் தொடர்ந்து பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நாள்தோறும் நிர்ணயித்து வருகின்றது. பெட்ரோல் விலை நேற்றைய விலையிலிருந்து லிட்டருக்கு 27 காசுகள் குறைந்து ரூ.77.83 காசுகளாகவும், டீசல் விலை நேற்றைய விலையிலிருந்து லிட்டருக்கு 17 காசுகள் குறைந்து லிட்டருக்கு ரூ.69.53 காசுகளாகவும் விற்கப்படுகின்றது.

இந்த விலை இன்று காலை அமலுக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.