சுரக்ஷா காப்புறுதியை இரத்து செய்யவில்லை : கல்வி அமைச்சர்!!!

4 மில்லியனுக்கு மேற்பட்ட பாடசாலை மணவர்களுக்காக நடைமுறைப்படுத்தப்பட்ட சுரக்ஷா காப்புறுதியை இரத்து செய்வதற்கு அரசாங்கம் தீர்மானிக்கவில்லை என கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

சுரக்ஷா பாடசாலை மாணவர்களுக்கான காப்புறுதியானது சமீப காலத்தில் இலங்கை மாணவர் சமூகத்திற்காக நடைமுறைப்படுத்தப்பட்ட முக்கிய திட்டமென்றும், அதனை இரத்து செய்வதற்கு எந்தவித தீர்மானமும் மேற்கொள்ளப்படவில்லை என்று கல்வி அமைச்சர் டளஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

இந்த காப்புறுதி பயனுள்ள திட்டமாகும் என ஜனாதிபதி உள்ளிட்ட அமைச்சரவை அடையாளம் கண்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனை நடைமுறைப்படுத்துவதில் சீர்குலைவு மற்றும் தேவையற்ற செயற்பாடுகளை புறம்தள்ளி ஆகக்கூடிய நன்மைகளை பெறக்கூடிய வகையில் செயற்படுத்தப் படவேண்டும் என கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை குறித்த விடயம் தொடர்பில் சில ஊடகங்களிலும், சில இணையத்தளங்களிலும் வெளியாகியுள்ள செய்தி முற்றிலும் உண்மைக்கு புறம்பானது என்றும் பொறுப்பற்ற வகையில் அச்செய்தி வெளியிடப்பட்டிருப்பதாகவும் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.