நடிகை அனுஷ்காவுடன் ஜோடி சேரும் பிக் பாஸ் பிரபலம்..!

சினிமாவில் முன்னணி நடிகையாக வளம் வந்தவர் அனுஷ்கா. இவர் தனது உடல் எடை காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக படங்களில் நடிக்காமல் இருந்தார். இந்த நிலையில் தற்போது மீண்டும் நடிக்க இருக்கும் அனுஷ்கா சைலென்ஸ் என்னும் படத்தில் நடித்து முடித்துள்ளார்.

இந்த படத்தை நான்கு மொழிகளில் வெளியிட இருப்பதாக தெரிவித்துள்ளார்கள். மேலும், இந்த படத்தின்  ஷூட்டிங்‌ நடந்து முடிந்து வெளியிட்டு பணிகள்‌ நடக்கின்றது.

கவுதம்‌ மேனன்‌ இயக்க உள்ள பெண்களின்‌ முத்தியத்துவம்‌ குறித்து பேசும்‌ ஹிந்தி படம்‌ ஒன்றின்‌ தமிழ்‌ ரீமேக்கில்‌ அனுஷ்கா நடிக்க இருப்பதாக செய்திகள்‌ வெளியாகியுள்ளது

இதை தொடர்ந்து, இப்படத்தில் பிக் பாஸ் புகழ்‌ நடிகை அபிராமி அனுஷ்காவிற்கு வில்லியாக நடிக்க இருப்பதாகவும்‌ தகவல் வந்துள்ளது. அதுமட்டுமின்றி அவரின்‌ கதாப்பாத்திரத்தை சுற்றி தான்‌ படத்தின்‌ கதை வலம்‌ வரும்‌ என்று கூறப்படுகிறது. பெண்களை மையமாகக்‌ கொண்டு உருவாகி வரும்‌ இப்படத்தின்‌ பணிகள்‌ ஏற்கனவே தொடங்கிவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.